பக்கம்:காகித உறவு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அசைக்க முடியாது


இன்சூரன்ஸ் கவர். இத்தகைய அரிய திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?”

பெருமாள் சாமி பணிந்து பேசினார். “இப்போ புரிஞ்சுக்கிட்டேன். இதுவரைக்கும் ஏடாகூடமா பேசினதை, ஐயா மன்னிச்சுடுங்க... நாளைக்குப் போய் மாடு வாங்கிக்கிறேன்.”

மறுநாள், பெருமாள் சாமியும், வெட்னரி டாக்டரும், சப்-மானேஜரும் மாடுபிடிக்கப் போனார்கள். முதலாவது பார்த்த ஜோடி காங்கேய மாடுகள். இரண்டாயிரத்து ஐந்நூறு; வாங்கவில்லை.

இரண்டாவது பார்த்த ஜோடி ஹெல்தி புல்ஸ் என்று வெட்னரியார் கூற, சப்-மானேஜர் வாங்கிவிடலாம் என்றார். பெருமாள்சாமியும், நல்ல மாடுங்கதான் என்று சொல்லி விட்டு, மாடுகளை உற்றுப் பார்த்தார். பிறகு முகத்தைச் சுழித்தார். அவரைப் பார்த்து, ஏன் சுழிக்கிறீங்க என்றார் சப்-மானேஜர்.

“மாடுங்க நல்லாத்தான் இருக்கு. ஆனால். இந்த மாட்டோட பிட்டத்தைப் பாருங்க. ரெட்டைச் சுழி...” என்றார் பெருமாள்சாமி.

“ரெட்டைச் சுழின்னா என்ன?” என்றார் வெட்னரி,

“இதுக்குத்தான், பள்ளிப்படிப்பு புள்ளிக்கு உதவாதுங்கறது. இதோ இந்த ரெட்டைச் சுழி மாட்ட வாங்குறதைவிட, ஒரு எரும மாட்டையும், அதோட எண்னையும் சேர்த்து வாங்கலாம். போன வருவடிம். என் மச்சினன் மவன் ரெட்டைச் சுழியை வாங்குனான். வாங்குன ரெண்டு மாசத்துல. சாவு...”

“மாடு செத்துடுச்சா?”

“இல்ல. மச்சினன் மவன் செத்துட்டான்.”

அந்த ஒன்றரை ஜோடிகளும் வேறு ஜோடிகளைப் பார்த்து விட்டு, இன்னொரு ஜோடி மாடுகளிடம் வந்தனர். விலை ரூபாய் 1800; வாங்கிவிடலாம்.

இதை வாங்கிடலாம் என்று சொல்லிக் கொண்டே பெருமாள்சாமி மாட்டை நெருங்கினார். பிறகு, “ஐயையோ.. இதுங்க... மயிலக்காளைங்க... மயிலயை வாங்கறதைவிட, மரணத்தை வாங்கலாமுன்னு எங்க தாத்தா சொல்லிட்டுச் செத்தாரு...”

“நிறத்துல என்னய்யா இருக்கு!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/22&oldid=1383284" இலிருந்து மீள்விக்கப்பட்டது