பக்கம்:காகித உறவு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

35


‘ஏய்... பஸ்ஸுக்குப் பணம் வேணுமா?’

‘அய்யோ சாமீ...’

‘இந்நேரம் பத்து குரங்குகள். பிடிச்சிருக்கணும். பேச்சுக்கு இதாடா நேரம்... நாலு நாள்ள - ஒரு குரங்கு கூட இந்தப்பக்கம் இருக்கப்படாது. ஆமாம் சொல்லிட்டேன்.’

பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் ஒத்திவைப்பு பிரேரணையை பஞ்சாயத்துக் கூட்டத்தில் கொண்டு வரப்போவதற்கு அங்கேயே ஒத்திகை பார்த்தார்.

‘குரங்குகளை... பிடித்துப் பிரயோஜனமில்ல. அப்பாவிக் குரங்குகள்தான் அகப்படுதுங்க... திருட்டுக் குரங்குங்க கூண்டைப் பார்த்ததுமே. ‘கூண்டோட’ ஒடிருதுங்க பஞ்சாயத்துப் பணந்தான் வேஸ்ட்; இல்லியாடா செங்கோடா

‘அதுவும் நெயாயந்தான் சாமி.’

பஞ்சாயத்துத் தலைவருக்கு மகாக் கோபம். இந்த செங்கோட்டுப் பயல், பஞ்சாயத்துப் பணம் வேஸ்டுன்னு சொல்றதை, வழி மொழிகிறான் என்றால் என்ன அர்த்தம்?

‘டேய். மலைப்பக்கம் போறீங்களா.. இல்ல பஸ் ஸ்டாண்ட் பக்கமா?’

‘அய்யோ சாமி என்று சொல்லிக் கொண்டு, கோட்டுக்காரியான லாரிச் சிங்கி தவிர, இதர குறவர்கள் புறப்பட்டார்கள். அப்போது, அவள் இரண்டு வயது பையன், வாய்க்குள் விட்டிருந்த ஆள்காட்டி விரலையும், பெருவிரலையும் எடுத்து, அருகே இருந்த ஒரு கோணி மூட்டைப் பக்கம் நீட்டினான். நேரத்தை வீணடிக்க விரும்பாத பஞ்சாயத்து தலைவர், ஏன் ஒன் பையன். அப்படி நீட்டுறான் என்றார். லாரிச்சிங்கி மகிழ்ச்சியோடு சொன்னாள்.

‘ஒ... அதா சாமீ அங்கோ. ...சாராயம் இக்கு. சாயோங்காலமா கொடுக்கோப்போறே. அரகிளாலோ இப்போவோ... கேக்குறான்... சாமி’

“என்ன. குழந்தைக்கா சாராயம் கொடுக்கிங்க?’

‘குத்தா என்னோ தப்பு சாமீ?’

‘ஒங்களுக்கு சாராயம். எங்கே கிடைக்குது?’

‘ஒங்கோட்கு... எங்கே கிடைக்கோ... அங்கோதான்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/37&oldid=1383352" இலிருந்து மீள்விக்கப்பட்டது