பக்கம்:காகித உறவு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

லாரி சிங்கி


லாரிச்சிங்கி கைதட்டிச் சிரிக்க, பஞ்சாயத்துத் தலைவர், அந்தப் பதிலை ரசிப்பதுபோல் அவளை ரசிக்க, பல குரங்குகளைப் பார்த்திருக்கும் செங்கோடன், ‘ஏய் லாரி சொம்மாகிட... இங்கோ... கொரங்குவரும்.... உஷாரா இருவோ’ என்று அறிவுரையை அதட்டுரையாக்கிவிட்டு பின்பு உள்ளுர்த் தலைவர்களிடம் வாங்கோ. சாமி என்று சொல்லிக் கொண்டு, அவர்களையும் வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டும் வெளியேறினான்.

சகாக்கள் போவது வரைக்கும் அவர்களின் முதுகு பக்கம் பார்வையை கோணக் கணக்கில் வீசிக் கொண்டிருந்த லாரிச்சிங்கி, அவர்கள் ஒரு முனைக்குள் திரும்பியதும், பார்வையை கூண்டுப் பக்கமாகத் திருப்பினாள். அங்கே, அதிகமாகச் சண்டையில்லை. ஆனால், கூண்டுப் பக்கமாக இருந்த அரச மரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு குரங்கு மெள்ள இறங்கி, கூண்டு பக்கமாக வந்து நின்றது. லாரிச் சிங்கியை ஜாக்கிரதையாகவும், கோபமாகவும், பார்த்துவிட்டு, கம்பி வலைப்பக்கம் முகத்தைக் கொண்டு போனது. உள்ளே ஒரு சின்னஞ் சிறிய குரங்குக் குட்டி, வெளியே நின்ற குரங்கிடம் பேசத்துடிப்பது போல் ‘கீக்கீ...கீக்கீ’ என்று கத்திக் கொண்டே, எம்பி எம்பிக் குதித்தது. கீரிப்பிள்ளையின் அளவுக்கு ஒணான் நிறத்தில் அணிலின் லாகவத்தில் மழலையாகக் கத்திக் கொண்டும், இருந்த அதைப் பார்த்ததும், வெளியே நின்ற தாய்க் குரங்கு, கம்பி வலையை பிய்க்கப் போவதுபோல் அடித்தது. பின்னர் வலி தாங்க முடியாமல் போகவே, கைகளை முஷ்டியாக்கி பார்த்துக் கொண்டது. தொலைவில் குழந்தையை அனைத்தவாறு பால் கொடுத்துக் கொண்டிருந்த லாரிச்சிங்கியை பரிதாபத்தோடும், பயங்கரமான கோபத்தோடும் மாறி மாறிப் பார்த்தது. அம்மாக் குரங்கு தன்னை எப்படியாவது மீட்டுவிடும் என்கிற நம்பிக்கையில், குட்டிக் குரங்கும் விழிகள் போலிருந்த கம்பி வலைக்குள் விழி பிதுங்க, தாயின் விழிகளைப் பார்த்துக் கொண்டிருந்தது. இதரக் குரங்குகள் கரங்களால் மெளனமாகத் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தன.

இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த லாரிச்சிங்கி குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு கூண்டுப் பக்கம் வந்து தன் பையனின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, பிடியை விடாமலே அந்த தாய்க் குரங்கைப் பார்த்து, பையனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/38&oldid=1383359" இலிருந்து மீள்விக்கப்பட்டது