பக்கம்:காகித உறவு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சனிக்கிழமை

ன்று வெள்ளிகிக் கிழமை, சனிக்கிழமை அல்ல. என்றாலும், சனிக்கிழமை அன்றே வந்தது போல, கல்லூரி முதல்வர் சுழற் நாற்காலியைச் சுற்றாமல், உட்கார்ந்திருந்தார். நாளை பல காரியங்கள் நடப்பதற்கு, இன்றே பல நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். சென்னையில் இருந்து கல்லூரி நிர்வாக டிரஸ்ட், ஆடிட்டர்களை அனுப்புகிறார்கள். அதற்காகக் கணக்குப் புத்தகங்களை 'அப்-டு-டேட்டாக்'க வேண்டும். சாப்பாடு சரியில்லை என்று ஹாஸ்டல் மாணவர்கள் எழுத்து மூலமாக புகார் கொடுத்திருக்கிறார்கள். வார்டனிடம் பேச வேண்டும். ஏனென்றால் இன்று மத்தியானமே சாப்பாடு சீர்திருந்தவில்லையானால், பீஸ் கட்ட் வேண்டியதில்லை என்று மாணவர்கள் சபதமிட்டிருக்கிறார்கள்.

கல்லூரி முதல்வர் பீஸான பல்ப் போல், களையிழந்து காணப்பட்டார். எல்லாக் காரியங்களையும் செய்வதற்கு அன்றே ஏற்பாடு செய்ய வேண்டியது இருந்ததால், அவரால் ஒரு காரியத்தையும் உருப்படியாகச் செய்ய இயலவில்லை

பிரின்ஸிபால், கலெக்டருக்குக் கால் போட்டார். கலெக்டர் "எங்கேஜ்ட், கால் கிடைக்காமல், கைகளை டயலில் இருந்து எடுத்து விட்டு, வைஸ்-பிரின்ஸிபாலிடம் ஏதோ சொல்லப் போனார். அந்தச் சமயத்தில் கல்லூரி மணி அடித்தது. காலையில் எட்டு மணிக்கே வந்துவிட்ட முதல்வர், அப்போதுதான் நேரத்தை, உணர்ந்தவராய் கையோடவே கொண்டு வந்திருந்த டிபன் பொட்டலத்தைப் பிரிக்கப் போன போது, பாடம் நடத்துவதற்காக வைஸ்பிரின்ஸிபால் எழுந்த போது

இரண்டு மாணவர்கள் திடுதிப்பென்று உள்ளே வந்தார்கள். ஒருவன் அளவுக்கு மீறிய உயரம். அவன் சைட்பர்ன். அதற்கேற்ற நீளம், சட்டியைத் தலைகீழாய்க் கவிழ்த்தது போன்ற மீசை, தொளதொள பேண்ட். இவன் தன் இனிஷியலைச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். காலேஜ் யூனியன் பிரஸிடெண்ட் கோபால் என்றுதான் சொல்வான். மாணவர்களும் அவனை செல்லமாக, சி.யூ.பி. கோபால் என்பார்கள். இன்னொருவன் குட்டை; ஆனால் உடம்பு பக்கவாட்டில் நீண்டிருந்தது. நாற்பத்தெட்டில் வரக்கூடிய தொந்தி, இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/49&oldid=1384258" இலிருந்து மீள்விக்கப்பட்டது