பக்கம்:காகித உறவு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

சனிக்கிழமை


பதினெட்டிலேயே வந்துவிட்டது. யூனியன் செயலாளர் ராமு என்றால், எல்லாருக்கும் தெரியும். இந்த இரண்டு பேரும் அரசியல்வாதிகள் கொடுத்த, ஆயிரம் ரூபாய்க்கும் போஸ்டர் போட்டு, பிரசுரங்கள் அடித்து, பல வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஐம்பது ஒட்டுக்கள் வித்தியாசத்தில் காலேஜ் யூனியன் தேர்தலில் ஜெயித்தவர்கள். இவர்களைப் பகைக்க முடியாது. கூடாது.

பிரின்ஸ்பால், "உட்கார் கோபால்" என்று சொன்னபோது, செயலாளர் ராமு உட்கார்ந்தான். கோபால் உட்காரவில்லை. அவன் அரசியல் மேடையில் பேசுபவன், நின்றால்தான் பேச்சே வரும்!

முதல்வர் அமைதியாக முகத்தை வைத்துக் கொண்டு அழாக் குறையாகப் பார்த்தார், ‘எப்பா. வகுப்பு நடக்கும் போதுதானா வரணும்? முன்னாலேயோ, பின்னாலேயோ வரப்படாதா? என்று கேட்கப் போனவர் வராண்டாவில் நின்ற ஏழெட்டு மாணவர்களைப் பார்த்ததும், சுருதியை மாற்றினார்.

வாட் ஐ கேன் டு பார் யூ. டெல் மி... ப்ளீஸ்...

கோபால் அவரை அரை மரியாதையோடும் வைஸ்பிரின்ஸ்பாலை அரை அவமரியாதையோடும் பார்த்துக் கொண்டே கேட்டான் :

'ஸார், இன்னைக்கு ரெண்டில் ஒண்ணு தெரியணும். ஒங்க பைனல் டிஸிஷனைச் சொல்லிடணும்.

முதல்வர் மருண்டு கொண்டே கேட்டார். எது ரெண்டு...? எது ஒன்று...?

"இனிமேல் சனிக்கிழமை கல்லூரி வைக்கக் கூடாது. எந்த ஸிட்டி காலேஜும், சாட்டர் டேயில் ஒர்க் பண்ணல்லே. இந்த ஜில்லா காலேஜ்ல மட்டும் ஏன் வைக்கணும்? நாங்க என்ன, ஸிட்டி காலேஜ் பையன்களைவிட மட்டமா? சொல்லுங்க ஸார்...?

முதல்வர் சொன்னார் :

"கோபால், ப்ளீஸ், நான் சொல்றதை தயவு செய்து கேளு."

'கேக்குற ஸ்டேஜ் தாண்டிட்டுது ஸார்.'

"முதல்ல கேளுப்பா. ஒனக்கே தெரியும், நான் பிரின்ஸிபாலா வந்து, மூன்று மாசந்தான் ஆகுது. இதுக்கு முன்னால இருந்த பிரின்ஸிபால் சனிக்கிழமையைக் கல்லூரி நாளாய் ஆக்கி, யூனிவர்சிட்டிக்குத் தெரியப்படுத்திட்டார். அதுக்கு ஏத்தாப்போல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/50&oldid=1383557" இலிருந்து மீள்விக்கப்பட்டது