பக்கம்:காகித உறவு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பிறக்காத நாட்கள்

ர்வதேசக் குழந்தைகள் ஆண்டை முன்னிட்டு, அந்தப் பையனின் பிறந்ததினத்தை, அன்று பிறக்காத சொந்தக்காரர்கள், சொந்தம் கொண்டாடியவர்கள் ஆகிய அத்தனை பேரும் சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள். குடிசைகளின் பிரச்னைகள் பத்தி அதிக அக்கறை செலுத்தும் பிரபல சமூக சேவகியின் பிள்ளையாண்டான் அவன். ஒன்பது வயதில் இத்தனை துருதுருப்பு, இத்தனை இன்டலிஜென்டாக யாரும் இல்லை என்று அங்கு வந்திருந்தவர்கள் அத்தனை பேருமே சொன்னார்கள். அதிலும் தாஜ் கோரமண்டல் உட்பட பல நட்சத்திர ஹோட்டல்களில், குடிசை வாழ் மக்களின் பிரச்னைகளை அலசி, புகைப்படக்காரர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் திருமதி, வளர்மதி நாகராஜனுக்கு அன்று சேவை செய்ய வந்தவர்கள் போல் அத்தனை முக்கியப் புள்ளிகளும் குழுமியிருந்தார்கள். ஒரு சிலர், தங்களின் பிறந்த நாட்களும் அன்றுதான் என்றாலும், குழந்தை ஆண்டை முன்னிட்டு வந்திருப்பதாகவும் பீற்றிக் கொண்டார்கள்.

ஒருவகையில் பார்த்தால், இந்த நாட்டில் வறுமை இல்லை என்று நினைப்பது போலவும், இன்னொரு வகையில் பார்த்தால், ஏழ்மையைக் கிண்டல் செய்வது போலவும், கட்டிளம் பெண்களின் முகங்களைவிட பளபளப்பாக இருந்த மொஸாயிக் தவிர, நிலத்தில் மண்வெட்டும் போது, தவறிப் பட்ட மண்வெட்டியால் நீருற்றுப் போல் ஒளிரும் விவசாயியின் ரத்தம் போல் பளிச்சென்று கண்சிமிட்டியது. கம்பீரமான காம்பவுண்ட் சுவருக்கு உள்ளே, கன கம்பீரமான அந்த பங்களாவில் 'ஷாமியானா' பந்தல். தேவையில்லாத அளவுக்கு, பலவிதமான 'டேய்களுக்கென்றே' அமைக்கப்பட்டது போல் தோன்றிய முன் பகுதியில், ஆடும் நாற்காலியில் ஆடாமல் சிலரும், ஆடாத நாற்காலியில் ஆடிக்கொண்டு சிலரும் அமர்ந்திருக்க, மிஸஸ். ராமநாதன், மிஸஸ். மார்த்தாண்டன் உட்பட பலரின் மிஸஸ்கள், பையன் கேக் வெட்டப் போவதை மிஸ் பண்ன விரும்பாதவர்கள் போல், நெருக்கியடித்து நின்றார்கள்.

சுவர்க் கடியாரம் ஏழுதடவை ஒலித்தபோது, ஹேப்பி பர்த் டே மெனி மெனி ரிட்டன்ஸ் ஆப்தி டே என்று கடியார ஒலிக்குப் போட்டியாக பிரமுகர்களும், பிரமுகிகளும் சத்தம் போட்டபோது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/59&oldid=1384261" இலிருந்து மீள்விக்கப்பட்டது