பக்கம்:காகித உறவு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

இரத்தத் துளிகள் பயிராகின்றன


வீராசாமி, இப்போது சிரிக்கவில்லை. கையில் தொங்கிய அருகம்புல்லை கையால் கசக்கிக்கொண்டே, அவனைப் பார்த்தார். பிறகு ஆறுதல் சொன்னார்.

"ஒன் மனசு... இளுகுன மனசுன்னு, மாமாவுக்குத் தெரியாதா.. ஊர்க்காரங்கதான் அவனுக்கு மனசு இளகுனது இல்ல. மூளை இளகுனதுன்னு சொல்லுதாங்க. சொல்லிவிட்டுப் போகட்டும்"

"எனக்கா மூளைக் கோளாறு? நான். எவன். பெண்டாட்டிய பிடிச்சி இழுத்தேன். நீரே சொல்லும்"

"போவட்டுண்டா... இந்த. பயிருங்கள... ஒன்கையால... பன்னருவாள வச்சி அறுக்க ஒனக்குச் சங்கடமா இருந்தா... பேசாம. இந்த நிலத்தை மாமாகிட்டே குடுத்துடேன்."

வினைதீர்த்தான், மாமா, விளையாட்டுக்குப் பேசுகிறார்: என்று நினைத்து, அவரை விளையாட்டுத் தனமாய்ப் பார்த்தான். அவரும் லேசாகச் சிரித்தார். வயலை விழுங்கிவிடுவது போல் அவர் பார்த்ததில், இவன் திடுக்கிட்டாலும், விளக்கேற்றி வைக்கும் மாமாவே, விளக்கை அணைக்கமாட்டார் என்ற தைரியத்தில் சிரித்தான். வீராசாமியும் விளைாட்டுக்குச் சொன்னவர்போல், “எழுந்திருடா. காலங்கார்த்தால... உரத்தப் போடுறத வுட்டுப்புட்டு. தத்துவம் பேசறான். தத்துவம்" என்று சொல்லி விட்டுத் துரத்தே தெரிந்த ஒரு சிவப்புச் சேலையைப் பார்த்து, ஓடாத குறையாக நடந்தார்.

நாலைந்து நாட்கள் ஓடின.

'சீம உரத்தை ஒர் ஒலைப்பெட்டியில் வைத்து, தோளில் சாய்ந்து அனை கொடுத்தவாறு, வயலுக்குப் போய்க் கொண்டிருந்த வினைதீர்த்தானைப் பார்த்ததும், டிராக்டரை ஒட்டிக்கொண்டு வந்தவனை நில்லுடா" என்று சொல்லி நிறுத்தி, பின்னார் உட்கார்ந்திருந்த வீராசாமி வினைதீர்த்தானையும் ஏற்றிக்கொண்டார். நேரடியாகவே கேட்டார்.

"என்னடா. நான். சொன்னத யோசிச்சுப் பார்த்தியாடா..."

"ஒமக்கு... கோயில்கட்டி கும்பிடப்போறேன் மாமா... இப்பல்லாம். நீரு சொன்னது மாதிரி தத்துப்பித்துன்னு நினைக்கிறதில்ல. நெல் பயிர... அழிச்சாலும்... நாமதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/88&oldid=1383466" இலிருந்து மீள்விக்கப்பட்டது