பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி மாஹாத்மியம். 'கண்ணே!மணியே! கரும்பே! தெளி தேனே! உண்ணோய் கெடஎம்முன் ஓடியெதிர் வாராயோ! (7) காண்டகு காதலனே காண்டகு காதலனே ! யாண்டு நீ போயினையோ யாண்டு நீ போயினையோ ! (8) மதியிழந்தேம் செல்வ வகையிழந்தேம் நல்ல கதியிழந்தேம் மைந்தவுனைக் காணாத பாவியேம்.” (9) இங்கனம் இவர்கள் அழ, இத் துக்க சமாசாரம் ஊர் முழுவதும் பரவிற் அவ்வூர் அரசன் செங்கோல் நடாத் துஞ் சீரிய குணத்துச் செல்வன். அவன் இதனேக் கேட்கவே, வெவ்விடந் தலைக்கொண்டாற் போல் வேதனை யகத்து மிக்குக் காவலரைக் கூவி, "நீங்கள் நாற்புறத்துங் காற்றிற் பறந்தோடித் துருவித் திருடனை உடனே கொணருதிர் எனப் பணித் தான். அங்ஙனம் புறப்பட்ட காவலருட்சிலர் தாடங்கனாய உன்னைப் பிடித்தார்கள். கைகளிலும், உடல் மீதும், இரத்தக் கறை இருக்கக் கண்டு உன்னை அவர் கள் இறுகப் பிணித்து நையப் புடைக்கவே, நோய் தாளாது நீ உண்மையை ஒப்புக்கொண்டாய். நீகவர்ந்த சொத்துக்களை உன்னிடமிருந்து பற்றிக்கொண்டு துஷ் டனாகிய உன்னையும் கழுமுனையி லேற்றும்படி அரசன் ஆக்ஞாபித்தான். ராஜ வீதியின் கோடியில் ஒரு புறத்தில் உன்னைக் கழுவேற்றினார்கள். கோவிந்த சருமனும் அவன் சுற்றத்தாரும் விதியினை யாவாே வெல்லு நீர்மையார்’ என்ற உண்மையை யோர்ந்து ஒருவாறு மனந் தேர்ந்து சிறிது கவற்சி நீங்கினர். இஃதிவ்வாறாக :