பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௪ காசி மாஹாத்மியம். தாடங்கனாகிய நீ கழுமுனையில் தினந்தோறும் மரணாவ ஸ்தையோடு துடித்துக்கொண் டிருந்தாய். அப்போது காசி யாத்திரை செய்கின்ற புண்ணியசீலர் ஒருவர் அவ் வூரில் இரவில் நீ இருந்த இடத்திற்குச் சமீபத்தில் வந்து தங்கினார். அவர் உன் கூக்குரலைக் கேட்டு உன்னை உற்றுப் பார்த்துப் பயந்து பின் வாங் கினார். அப்போது நீ அவரை நோக்கி, ஐயரே ! அஞ்சுதல் வேண்டாம், தயை செய்து சமீபத்தில் வாருங்கோள்’ என்று சொல்ல, அவரும் சமீபித்து வந்தார். வருதலும் நீ அவரை நோக்கி, ஐயரே ! தனது தீய நடத்தை பால் வரும் ஆபத்துக்களை ஒருவன் நீக்க முடியுமா ? நான் செய்த தீமையோ மிகவுங்கொடியது. அவனவன் கர்ம பலத்தை அவனவனே அதுபவித் தல் வேண்டும். நீங்கள் தீர்த்த யாத்திரிகர் போலத் தோன்றுகின்றது. புண்ணிய தீர்த்தங்களில் ஆடி வரும் நீங்கள் எனது வேண்டுகோள் ஒன்றைச் செவி யேற்றருளல் வேண்டும் ; கங்கைக் கரையிற் கயா சிரார்த்தம் வெகு விசேஷமென்று நான் கேள்விப்பட் டிருக்கின்றேன். அங்கே நீங்கள் சிரார்த்தம் செய்வ தால் வரும் பலனில் நூற்றில் ஒரு கூறு தனியாய் எனது நற்கதிக்கென்று தத்தஞ் செய்ய வேண்டுகின் றேன். இதுவே என் பிரார்த்தனை. இப்பிறப்பில் இனி ஒன்றும் என்னால் இயலாதாதலின் இவ் வுத விக்குக் கைம்மாறு நான் மறுபிறப்பிலேனுஞ் செய்கி றேன்’ என்று இரந்து கேட்டுக்கொண்டாய். இம் மொழியைக் கேட்ட தயாளுவாகிய அவ் வழிப்போக் கர் 'அங்ஙனே செய்கிறேன், அஞ்சுதல் வேண்டா' என வாக்குத்தத்தஞ் செய்து சென்றார்.