பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ௧௫

காசி மாஹாத்மியம்

இங்ஙனம் நாலைந்து நாள் கழுமுனையிற் துன் புற்றாய். அப்போது ஒர் நாள் கள்ளிருளிற் பேய்க் கூட்டங்கள் உன் அருகிற் போந்து சூழ்ந்தன. அவை வெகு கோர ரூபத்தன. பிலம் போன்ற வாயையும், வாயால் உண்டு நிறையாத வயிற்றையும், பனங்காடு போலப் பரந்துள்ள கைகளையுங் கால்களையுங் கொண் டன. புற்றென்று நினைத்து உடும்பு, பாம்பு முதலிய உட்புகுந்து உறங்கும் உந்தியையும், பாம்பைப்போலத் தொங்கும் உரோமங்களையும், பாசி படர்ந்த பழைமை யான மூக்குத் தொளைகளையும் உடையன. ஆந்தை ஓர் புறத்துப் பதுங்கியிருக்க, துரிஞ்சில் அங்கும் இங் கும் உலாவும் செவிகள் வாய்ந்தன. மண்வெட்டியை யுங் கலப்பையையுங் கோத்துவைத்தாற்போன்ற பல் வரிசைகளைப் பெற்றன. பச்சோந்தி, பாம்பு முதலிய வற்றைக் கோத்துத் தாலியாக அணிந்துகொண் டிருப்பன. ஆகாயத்தை முட்டுந் தலையையும், தாழ்ந்து மார்பின் கீழ் வந்து தட்டும் உதட்டையும் உடையன. பருத்துயர்ந்த பெருமூங்கிற் புதர்களைக் கண்டால் எம் அன்னை அன்னை' என்று அவைகளோடு உறவாடுவன. ஒட்டகங்களைக் கண்டால் ' இவை எம் பிள்ளை பிள்ளை' என்று அவைகளைச் சீராட்டுவன.

கலிங்கத்துப் பரணியிலுள்ள பின்

வருஞ் செய்யுள்களைக்

தழுவிப் பேய்களின் வருணனை எழுதப்பட்டது:

  • வன்பிலத்தொடு வாதுசெய் வாயின வாயினால்நிறை யாத வயிற்றின முன்பிருக்கின் முகத்தினு மேற்செல மும்முழப்படு மம்முழந் தாளின.