பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி மாஹாத்மியம். ௧௭

கேளுங்கோள் என் கதையை. யான் முன் ஜன்மத்தில் பெண் கள் சிகாமணியாய் வேசியர் குலத்துக்கு ஒர் ரத்நமாலிகையாய்ப் பிறந்தேன். என் இச்சை போன வழியெல்லாஞ் சுகித்திருந்தேன். குபேர நிதியும் தேவே ந்திர போகமும் என்னிடத்து ஒருங்கு இருந்தன. தனப் பெருமையாலும் செளந்தரியப் பெருமையாலும் நான் அரசர்களுக்கும் அஞ்சவில்லை. ரூபலாவண்யத்தாலும், வெகு ரம்யமாய்ச் சல்லா பஞ் செய்யுஞ் சாமர்த்யத்தாலும், ஆடல், பாடல் முதலிய வற்றிலிருந்த முதற்றர தேர்ச்சியாலும், மற்றும் வேசியர்க்கு வேண்டிய லக்ஷ்னங்களாலும் வேசியர் யாவரினும் மேம்பட்டு வேசியர் திலகம் எனப் பிரசித்தி பெற்றேன். பொருள் பறிப்பதில் எனக்கு இருந்த சாமர்த்யம் வேறு எவருக்குங் கிடையாது. இங்ஙனஞ் செல்வ மமதையாற் கண் கெட்டிருந்ததால் நான் பெரிய தோஷத்திற்கு இடந்தந்தேன். ஒரு நாள்

அந்தி வேளையில் எனது தோழியரோடு விளையாடிக்
களித்து மாளிகையின்மேன்மாடியி லிருந்தேன். 
அப்போது வாயி லிருந்த தம்பலத்தை மென்று கீழே
உமிழ்ந்தேன். அந்தோ ! என் பாபம் அது கீழே

தெருவிற் போய்க்கொண்டிருந்த ஒரு விப்பிர சிகா மணியின் தலை மீது வீழ்ந்தது. அம் மறைபோன் நிமிர்ந்து நோக்கி, அடி வேசி நசிப்பாயாக !

துஷ்டே ! நீ பிசாசாகக் கடவது’ எனச் சபித்தான். இதனைக் கேட்ட நான் மனங் கலங்கி விரைவிற் கீழி றங்கி ஓடி அவன் பாதத்து வீழ்ந்து நமஸ்கரித்து, * அறியாது செய்த அபராதத்தை, அந்தணர் பெரு ___________________________________

  • விப்பிர சிகாமணி-பிராமண சிரேஷ்டன்,。