பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 சிவமயம். முகவுரை மலையாள பாஷையிற் சிவபுராணம் என்ரறொரு நூல் இருக்கின்றது. அது மலையாள கவிகளுள் மிகப் பிரசித்தி பெற்றவரான இராமாநுஜ எழுத்தச்சன் என் பவரால் எழுதப்பட்டது. அவர் காலம் ஏறக்குறைய 300 - வருஷங்களுக்கு உட்பட்டதாகும். தமிழில் வர துங்கராம பாண்டியர் அருளிச் செய்த பிரமோத்தர காண்டத்திலுள்ள சரித்திரங்களே இச் சிவபுராணத் துங் கூறப்பட்டுள்ளன. ஆனால் பிரமோக்கா காண் டத்திற் கூறப்படாத ஒரு திவ்ய சரித்திரம் இச் சிவ புராணத்திற் கூறப்பட்டுளது. அச் சரித்திரத்தைத் தமிழ்ப் படுத்தினால் அது தமிழ் நாட்டுச் சைவராயி னோர்க்குப் பயன் தருமெனக் கருதி அதைத் தமிழில் எழுதலாயி னோம். அச் சரித்திரமே இக் காசி மாஹாத் மியச் சரிதம். இச் சரித்திரத்தாற் காசித் தலத்தின் மேன்மையும், கங்கையின் சிறப்பும், சிவபிரானது வள்ளன்மையும் நன்கு விளங்கும். புத்திரப்பேறின்றிக் கவற்சி யு றுவோர் இச் சரித்திரத்தைப் படித்து உறுதி யோடு சிவபெருமானை வழிபடுவாராயின் புத்திரப் பேறே யன்றி மற்றெல்லாப் பேறும் பெறுவரென்பது திண்ணம். சென்னை : 1-8-1906 வ. சு. செங்கல்வராய பிள்ளை