பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Φl திருத்தணிகேசன் துணை. கடவுள் வாழ்த்து துண்டி விநாயகர். துண்டி விநாயகனை, மண்டு மவாவினொடு கண்டு வணங்கிடுவோர், பண்டை வினையறுமே. (1)

தணிகை நாதர்.

சிற்பரர்க்குத் * தெரியொணாத் தற்பரப் பொருள் சாற்றிய உற்பலக் கிரி யோங்கிய கற்பகத்தைக் கருதுவாம். (2)

விசுவ நாதர்.

விசுவ நாதனைப், பசுவ தேறியைக் \ கசிவி னோதிட, அசைவு தீருமே. (3)

அன்னபூரணியம்மை.

அன்ன பூரணிச், சொன்ன தாள்களைச் சொன்ன தொண்டரை,உன்னிஉய்குவாம். (4) ____________________________________

  • தெரியொணாத் தற்பரப் பொருளைச் சிற்பாரர்க்குச் சாற்றிய என அந்வயப்படுத்திப் பொருள் கொள்க.

+ உற்பலக்கிரி-நீலோற்பலமலை ,திருத்தணிகை அசைவு-சலனம், கலக்கம்.

சொன்ன-பொன்மயமான, சொர்ண என்பதன் மரூஉ.