பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/5

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



காசி விசேடம்.

எண்மைப் புல னேய்ந்த முநி
ஒண்மைக் கர மோய்ந்திடலால் உண்மைப் பொரு ளோர்ந்தனமே திண்மைக் கதி தேர்ந்தனமே.

(5)

$ ஒருமுறை சிவன் பெரியரோ விஷ்ணு பெரியரோ என்னுந் தருக்கம் முநிவர்களுக்குள் உண்டாக அவர்கள் வியாச முநிவரை இதற்கு முடிபு கூறும்படிக் கேட்டுக்கொண்டார்கள். அவர் விஷ்ணுவே பெரியர் என்றார். அப்போது சிவ முநிவர்கள் ஐயா, இப் போது இங்கே சொன்ன சொல்லைக் காசித் தலத்திற் கங்கைக் கரையில் விசுவேசர் சந்நிதியில் சொல்லுவீரானால் ஒப்புக்கொள்ளுவோம்' என்றார்கள். அவரும் அப்படியே செய்கிறேன் என்று காசியைச் சேர்ந்து கங்கைக் கரையில் நின்று விஷ்ணுவே பெரியர்' எனக் கூறிக்கொண்டே தமது கையை மேலே தூக்க,கந்தியெம்பெருமான் 'உம்' என அதட்டினார். அப்போது முநிவர் கை அப்படியே தம்பித்து நின்றுவிட்டது. பின்னர் அவருக்கு நல்லுணர்ச்சி தோன்ற, சிவபிரானையும் நந்திதிகேசுரசையுந் துதித்துத் தமது கையின் சுவாதீனத்தைப் பெற்றனர்- என்னுஞ் சரித்திரம் இப் பாட்டிற் குறிப்பிக்கப்பட்டுள்ளது. இவ் விஷயம்,

யிரு புராண நூல் அமலற் கோதியுஞ் செய்யபன் மறைகளுந் தெரிந்து மாயையால் மெய்யறு சூள் புகல் வியாதன் நீட்டிய கையடு நந்திதன் கழல்கள் போற்றுவாம்.


பையரா வின்மேற் கண்டுயில் பண்ணவன் தனக்குக் தையல் பாதிய னே பரம் பொருளெனுந் தன்மை மையன் மாநுட ருணர்ந்திட மறைமுநி யெடுத்த கைய தேயுரைத் திட்டதோர் காசியைக் கண்டான்.”


என்னுங் கந்த புராணச் செய்யுள்களாலும், 'கங்கைசூழ் கிடந்த காசிமால் வரைப்பிற், பொய்புகல் வியாதன் கைதம் பித்தலின்” என்னும் சுலோக பஞ்சக மொழிபெயர்ப்பாலும் அறியலாகும். இச் சரித்திரத்தாற் காசியின் சிறப்பு நன்கு விளங்கும்.