பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧Ο காசி மாஹாத்மியம். யால் அரசனுக்குத் தினந்தோறும் கவலை வளர்ந்து கொண்டே வந்தது. புத்திரப் பேற்றைக் குறித்துப் பல வித கருமங்களை மன்னவன் உவப்போடு செய் தான். கோயில்களுக்குத் தீப கட்டளை, அன்ன கட் டளை முதலிய ஏற்படுத்தினான். பூசுரர்களுக்குக் தினந்தோறும் குடை, உடை, பசு, பூமி முதலிய தானங்கள் செய்தா ன். என்ன செய்தும் புத்திரோ ற்பத்தி யடையாமை யால் அரசன் மிகக் கவற்கியோடு தன் மனைவியை நோக்கி, ஹே ! மந்தாரலக் மி ! மனோமணி எனது பிரிய நாயகி! நாம் இருவரும் பாக்கிய ஹீனர்கள். ஒரு குழந்தையின் தாமரைப் பூப் போலும் முகத்தைக் கண்டு களிக்கும் பாக்கியம் நமக்கு இல்லாமற் போய் விட்டது. இங்ங்னம் புத்திர னில்லாது இப்போது வருத்தும்படி நாம் முன் ஜன்மத்தில் என்ன பா வஞ் செய்தோமோ புத்திர னில்லாதவனுக்கு நாடும் நகரமும் நாநா பதார்த்தங்களும், தனங்களும், சுற்றமும் யாது பயனைத் தரும்? அவனுக்கு இம்மையினுந் துக் கம், மறுமையினுந் துக்கம். நமது கர்ம வினையைப் பார்த்தாயா? பிதிர்த்தொழில் செய்ய மக்களில்லா விட்டால் நமக்கு நல்ல கதி எங்ங்னங் கிடைக்கும் 2. என்று கூறி இருவருங் கவலுந் தருணத்தில் ஆநந்த ஸ்வரூபியாகிய ஸ்ரீ நாரத முநிவர் அரசனது சபா மண்டபத்திற்கு வந்தார். அாசன் அவரைப் பேராநந்தத்தோடு எதிரேற்று வந்தித்துப் பூசித்து சிம்ஹாசனத்தில் விற்றிருக்கச் செய்தான். பின்பு அவரது பாதார விந்தத்தில்