பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧உ காசி மாஹாத்மியம். நீ குந்தள தேசத்தில் அந்திய வமிசத்திற் பிறந்து வளர்ந்தாய். பலர் பொருளைக் கவர்ந்து வீடு, வாசல் முதலிய கட்டிக்கொண்டாய். தாடங்கன் என் பது உன் பெயர். உன்னுடைய பண ஆசையால் நீ ஒரு முறை பிராமணர் வீதியில் தேவேந்திரனுக்குச் சம மான செல்வத்தை பெற்ற கோவிந்தசருமன் என்பவ ருடைய வீட்டில் இரவிற் கன்னம் வைத்துச் சுவரைத் துளைத்து உள்ளே புகுந்து அவனும் அவன் மனைவி யுங் குழந்தையும் உறங்குவதைக் கண்டு ஆண்டுள்ள பொருள்க ளெல்லாவற்றையுங் களவாடினாய். அப்போது அங்கே வைரக் கடுக்கன், பொற்றோடு, பொன் அரை நாண், பொற்சிலம்பு முதலிய அணிந் து உறங் கும் குழந்தையை அதிக குதூகலத்துடன் மெது வாய் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து அருகிலுள்ள காட்டில் நுழைந்து, ஆபரணங்க ளெல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, குழந்தையைக் கழுத்தைப் பற்றித் திருகி முறித்து ஓர் ஆழ்ந்த கிணற் றில் எறிந்து சென்றாய். வீட்டிற் கோவிந்த சருமனும் அவன் மனைவியும் தங் குழந்தையைக் காணாது பிரமித்து வாய்விட்டலறி னார்கள். ஐயோ! எங்கள் அருமைக் குழவியைக் காணோமே ! எங்கள் கண்மணியை இழந்தோமே ! என் செய்வேம் ! என் செய்வேம் ! அங்கோ ! தெய் வமே ! மோசஞ் செய்தாயே! இதுவோ நினதருள் ! அப்பா ! குழந்தாய் ! யாண்டுச் சென்றாய் ! எங்கே இருக்கிறாய் ! வாராயோ! வாராயோ! மைந்த எதிர் வாராயோ! பாராயோ எங்கள்முகம் ! பாராயோ எங்கள்முகம் ! (6)