பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமியின் இறையநுபவம் 93 அப்படியே. ஆழ்வார்கள் திருவாக்கில் புகுந்து புறப்பட்ட திருப்பதிகளில் அன்றோ எம்பெருமானுக்கு மதிப்பு அதிகம். (8) இரத்தினம் ஒளியை விட்டு இராது: எம் பெருமானும் பிராட்டியை விட்டு இரான். (9) இரத்தினத்திற்கு ஒளியால் மகிமை எம்பெருமானுக்கும் பிராட்டியால் ஏற்றம். (10) இரத்தினத்திற்கு ஒளியால் ஏற்றமென்றாலும், இரத்தினத்தின் சுதந்திரப் பெருமைக்கு ஒரு குறை இல்லை; எம்பெருமானுக்கும் அப்படியே. (11) இரத்தினம் கடல், மலை முதலிய இடங்களில் உள்ளது. எம்பெருமானும் திருப்பாற்கடல், திருமலை முதலான இடங்களில் உள்ளான். (12) இரத்தினம் எவ்வளவு உயர்ந்த தாயினும் தலைப்பில் முடிந்து ஆளலாம்படி இருக்கும். எம்பெருமானும் பரத்துவத்தை மறைத்து (அர்ச்சையில்) செளலப்பியத்தைக் காட்டுகின்றவனன்றோ? (13) இரத்தினம் பெற்றவர்கள் இரவும் பகலும் கண்ணுறங்கார்; எந்த வேளையில் யார் கொள்ளை கொள்வாரோ என்று துஞ்சாதிருப்பார்கள். எம்பெருமானைப் பெற்றவர்களும் அப்படியே. "கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே' என்கின்றபடியே காண்பதற்கு முன்பு உறக்கம் இல்லை; கண்ட பின்பும் இல்லை. இப்படிச் சுவாமிகள் இரத்தினத்திற்கும் எம்பெருமானுக்கும் உள்ள உவமைப் பொருத்தங்களைக் கண்டு இறைய நுபவத்தில் திளைப்பார்கள். நாமும் அவர் வழியைப் 37. திருவிருத். 97