பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தியிகையின் நயப்பகுதிகள் திவ்வியார்த்த தீபிகையின் நயப்பகுதிகளை காட்ட முயல்வேன். இவற்றை ஐதிகங்கள், இதிகாசங்கள், சம்வாதங்கள் என்ற மூன்று தலைப்புகளில் வகுத்தும் தொகுத்தும் காண முயல்வேன். 1. ஐதிகங்கள் ஐதிகம் என்பது சம்பிரதாயம் அடியாக வந்த ஒரு வார்த்தை. அதாவது முன் நடந்ததைத் தெரிவிப்பது. எ-டு. ஒன்றால் இதனை விளக்குவேன். அம்மங்கி அம்மாள்' என்ற ஓர் ஆசிரியர் நோயால் வருந்தியிருக்க, நஞ்சீயரும்: நம்பிள்ளையும் அவரைக் கண்டு நலம் விசாரிக்கச் சென்றனர். அப்போது அவர் மிகவும் கிலேசப் படுவதைக் கண்டு நஞ்சீயர் 'சுவாமின் தேவரீர் சாமானிய மனிதரன்றே: எவ்வளவோ பகவத் - பாகவத கைங்கரியங்கள் பண்ணி யிருக்கின்றீர்; குணாநுபவத் தாலல்லது போது போக்கி அறியீர்; இப்படியிருக்க உம்மை மற்றவர்களைப் போல 1. அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடைய சீடர். 74 சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர். 2. நஞ்சீயர் - பிறப்பிடம் திருநாராயணபுரம் (கர்நாடகம்). இவர் வேதாந்தி என்ற பெயர் கொண்ட அத்வைதி. பின்னர் வசிட்டாத்வைதி ஆனவர். திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி வியாக்கியானம் செய்தருளினவர். 3. நம்பிள்ளை - நம்பூரில், பிறந்தவர் வரதராசர் என்ற இயற்பெயரினர். புரீரங்கநாதர் என்பது இவரது தாஸ்யத் திரு நாமம், திருவாய் மொழிக்கு முப்பத்தாறாயிடற்ப்படி (ஈடு) அருளிச் செய்தவர்.