பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 99 அடங்கலும் (கவ்ய ஸ்ம்ருத்தி அடங்கலும்) பாழ்போக வொண்ணாதென்று இத்தை அமுது செய்கைக்காக நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளையாய்த்து ரீ கிருஷ்ணன். பெரிய பெருமாள் கொறுட்டை (உதட்டை) முகர்ந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்குமாம். ஐதிகம் - 4 அருள் கொண்டாடும் (கண்ணிநுண் - 8) என்பதன் உரையில் வருவது. திருவாய்மொழியில் "எண்ணாதனகள் எண்ணும் நம் முனிவர் இன்பம் தலை சிறப்ப, பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி" (10.7:3) என்றவிடத்து அருள் செய்யும் பொருள் சிறப்பை ஈண்டு அநுசந்திக்க, எண்ண முடியாதவற்றை எண்ணுகின்றவர்களான நம் முனிவர்கள் பேரானந்தம் பெறும்படியாகத் திருவாய்மொழி அவதரித்ததாம். எண்ணாத வற்றை எண்ணுகையாவது என்? எனில்: திருவாய்மொழி அவதரிப்பதற்கு முன்பு பல பெரியோர் அவைகூடி "எம்பெருமானுடைய சொரூப குண விக்கிரக விபூதிகளையெலாம் முற்றும் நிறைவாகப் பேச வல்ல பிரபந்தம் ஒன்று கூட இல்லை; அப்படிப்பட்ட பிரபந்தம் ஒன்று அவதரிக்க வேணுமென்று நாம் எம்பெருமானை வேண்டிக் கொள்ள வேணும்" என்று பேசி எழுந்து போனார்களாம். அவர்களே திருவாய்மொழி அவதரித்த பின்பு மறுபடியும் ஒரு பேரவை கூட்டி எம் பெருமானுக்கு இன்னமும் குணவிக்கிரக விபூதிகள் உண்டாக வேணும்' என்றார்களாம். உள்ள குணவிக்கிரக விபூதிகளையெல்லாம் திருவாய்மொழியில் பேசி முடித்து விட்டார் ஆழ்வார் என்பது இதன் கருத்து. ஐதிகம் - 5 : முற்றமுத்துக் கோல் துணையா (பெரி. திரு. 1.3:1) என்ற தொடரில் கோல் துணையா என்ற விடத்து வியாக்கியானத்தில் இரு ஐதிகங்கள்