பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 111 சாகரத்தில் மூழ்கிய என்னை மீட்டுப் பாதுகாத்தருள வேண்டும்" என்பது இப்பாசுரத்துக்குக் கருத்தாகக் கொள்ளத்தகும். இந்த இதிகாசம் பெரி.திரு. 5.8:7லும் வந்துள்ளது. இதிகாசம் - 4 : மொய்த்தவல் வினையுள் நின்று' (திருமாலை - 4) என்ற தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்புாசுரத்திலுள்ள மூன்றெழுத்துடைய பேரால் கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான் (முதல் இரண்டடி) என்ற அடிகளின் உரையில் வருவது (மூன்றெழுத்து - கோவிந்த' என்ற நாமம்). இதிகாசம் : கத்திரபந்து கொடிய நடத்தையுடையவன்; பல்வகைப் பாவங்களே உருவெடுத்தாற் போன்றவன். இவன் தாய் தந்தையர், மக்கள், உறவினர், நண்பர்கள் ஆகிய அனைவராலும் கைவிடப் பெற்றுக் காட்டில் திரிந்து உயிர்க் கொலை புரிந்து வயிறு வளர்த்துக் காலம் கழித்து வந்தான். இங்ங்னம் நெடுங்காலம் சென்றது. ஒருநாள் மாமுனிவர் ஒருவர் கொடிய நண்பகலில் வெப்பம் தாங்க மாட்டாமல் வழி தப்பிப் போகா நின்றவர் இப்பாவி திரியும் கானகத்தில் புகுந்து இவன் கண்ணுக்கு இலக்காயினர். அவரது பரிதாப நிலையைக் கண்ட இவனுக்குத் தன்னையும் அறியாமல் அவர்பால் இரக்கம் உண்டாயிற்று. அவரிடம் வழி தப்பியப்போவதைச் சுட்டிக் காட்டினான். அவரும் அதனை உணர்வராயினர். பொறுக்க முடியாத தாகவிடாயுடன் அவர் ஒரு தடாகத்தை நாடிச் செல்கையில் அருகே ஓர் அழகிய பொய்கையைக் கண்ணுற்றார். தாப மிகுதியால் தவறி அக்குளத்தில் விழுந்துவிட்டார். அப்போது அருகிலிருந்த கத்திரபந்து தன் கையிலிருந்த வில்லையும் அம்பையும் எறிந்து விட்டு அம்மாமுனிவரை நீரின்றும் அகற்றித் தாமரைக் கிழங்குகளை உணவாக நல்கி அவரது விடாயைப் போக்கி அவரை மகிழ்வித்தான்.