பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் 3. சம்வாதங்கள் சம்வாதம் என்பது சம்பாஷனை; உரையாடல். எ.டு. 'வீவின்றி நின்றவர் (திருவாய் 7.5:11) என்ற தொடரை விளக்குவதற்கு நம்பிள்ளை நஞ்சீயரிடையே நடைபெற்றதைப் போன்றது. அதாவது, "அர்ச்சுனன் தான் எம்பெருமானைப் பெற்றானோ? இல்லையோ?" என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்க அதற்கு அவர் அளித்த மறுமொழி: 'அர்ச்சுனன் பெற்றானோ? இல்லையோ? என்ற விசாரம் உமக்கு எதற்காக? யார் யார் பெற்றார்கள்? என்று அவர்களை யெல்லாம் ஆய்ந்து பார்த்தா நாம் பற்ற வேண்டும்? எம்பெருமானுடைய அருளிச் செயல் என்று இவ்வளவே கொண்டு நாம் பற்ற வேண்டுமேயொழிய, பெற்றவர்களைப் பார்த்தன்று காணும். குளிர்ந்ததண்ணி கண்டால் அது குடித்து விடாய் தீர்க்கின்றோம்; இது குடித்து யார் யார் தாக விடாய் தீர்த்தார்கள்? என்று விசாரித்துப் பார்த்தா பருகுகின்றோம்? இல்லையே' என்று அருளிச் செய்தாராம்.' இத்தகைய சம்வாதங்களும் பாசுரத்தின் பொருளுக்குப் புதிய ஒளி காட்டுவனவாக இருக்கும். சிலவற்றை ஈண்டுக் காட்டுவோம். 1. சம்வாதம் - 1: எத்திசையும் அமரர் பணிந்தேத்தும் (நாச்.திரு.5:6) என்ற பாசுர உரையில் வருவது. தத்துவனை வரக்கூகிற்றையாகில் (நான்காம் அடி) வரும் 'தத்துவன் என்பதற்கு என்னுடைய உயிர்நிலைத்திருப்பதற்குக் காரணமானவன்' என்ற பொருள் அருளிச் செய்யப் பெற்றுள்ளது. வியாக்கியானத்தில் "இக்குயில் கூவியழைக்க வேண்டும்படி அவன் வரத்தாழ்க்கச் செய்தேயும் தன் 11. வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று உண்பரோ நீருண் பவர் என்ற கலிப்பா (கலி.82) அடிகளில் வரும் தலைவன் கூற்றோடு வைத்து இஃது எண்ணத் தகும்.