பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திவ்யார்த்த தீபிகை-வழிநூல் சுவாமிகளின் படைப்புகளுள் திவ்வியார்த்த தீபிகை மிகச்சிறந்த படைப்பு. நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாசுரங்களின் தாற்பரியத்தை பளிங்கெனக் காட்டும் ஒரு சிறந்த கைவிளக்கு. இந்த இருள்தருமா ஞாலத்தில் மக்களாகப் பிறந்த நாம் அறிய வேண்டிய பொருள்களை பராசர பட்டர்; மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும் ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன் யாழின் இசை வேதத்து இயல்' என்ற தனியனில் விளங்கிப் போந்தார். இதன் விரிவான விளக்கம் இந்த ஆசிரியரின் நூல் ஒன்றில் தரப்பெற்றுள்ளது." "தீபிகா என்ற வடசொல் ஐ விகுதி பெற்று "தீபிகை எனத் தமிழ் உருவம் பெற்றுள்ளது. தீபிகை - விளக்கு மேற்குறிப்பிட்ட ஐந்து பொருள்களை உணர்த்த திருக்குருகைப் பிள்ளான் தொடக்கமாக (ஆறாயிரப்படி) நம்பிள்ளை ஈறாக முப்பத்தாறாயிரப்படி)வுள்ள ஆசாரியப் பெருமக்கள் மணிப்பிரவாளத்தில் உரைகள் எழுதியுள்ளனர். அவ்வுரைகளை ஆசாரியர்கள் வாயிலாகக் கேட்டாலன்றி விளங்காத நிலையில் உள்ளவை. எனவே, வடமொழி தமிழ்மொழி ஆகிய இருமொழிப் புலமையும் மணிப்பிரவாள நடையின் நெறிமுறைச் சுவடுகளை அறிந்த திறனையும் 1. திருவாய்மொழி தனியன் - 16 2. சடகோபன் செந்தமிழ் - 13 அர்ந்த பஞ்சகம் - பக் 346 - 356.