பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பிரதாய வைணவ மரபுகள் 151 இரண்டு அவதாரக் கூறுகளை யுடையவன் என்பதும் வைணவர்களிடையே வழங்கி வரும் கருத்துகளாகும்." (7) திருக்கோயில் அமைப்பு : திருக்கோயில் சில தத்துவங்கள் விளக்கம் பெறுவனவாக உள்ளன. (i) திருவரங்க விமானம் ஏழு சுற்றுகளுக்கும் நடுவில் உள்ளது. பிரணவ ஆதாரமாயுள்ளது. நான்கு திருமறைகளும் சாத்திரங்களும் தூபிகளாயுள்ளன. பரவாசு தேவன் இதிலிருந்து சேவை சாதிக்கின்றான். 'ஓம்' என்ற பிரணவம் விமானமாகவும் நமோ நாராயணாய என்பதிலுள் ஏழு எழுத்துக்கள் ஏழு திருமதில்களாகவும் அமைந்துள்ளன.” எட்டெழுத்து மந்திரத்தை ஆராய்பவருக்கு இறைவனின் தன்மை புலப்படுவது போல திருஅரங்கத்திற்குச் செல்பவர் கட்கும் இறைவன் நேரே புலனாவான் என்பது கருத்து. விமானத்தின் முன்பகுதியில் நிற்பது காயத்திரி மண்டபம், விஷ்ணு காயத்திரியின் அறிகுறியாக 24 தூண்களால் அமைக்கப்பெற்றது (24 தத்துவங்களின் அறிகுறியாக இருப்பனவாகவும் கருதலாம்) (ii) காஞ்சி வரதராசரைச் (அத்திகிரி அருளாளனைச்) சேவிக்க 24 படிகளை ஏறிச் செல்லவேண்டும். இவை 24 தத்துவங்களின் குறியீடுகள் : அதாவது தந்மாத்திரைகள் 5: ஞானேந்திரியங்கள் 5 ; கருமேந்திரங்கள் 5; பூதங்கள் 5 ; ஆக இவை 20. இவற்றுடன் பிரகிருதி 1, மகான் 1, அகங்காரம் 1, மனம் 1 ஆக நான்கும் சேர 24 தத்துவங்களாகின்றன. இவற்றுடன் புருடன் (ஆன்மா)', மகாபுருடன் (பரமான்மா) 1 சேர்ந்து வைணவ தத்துவம் 26 ஆகின்றது. 2. தேசிகப் பிரபந்தம் - 81, 82, 83 3. திருவரங்கமாலை - 95 4. ஹஸ்தி - யானை, கிரி - மலை. ஹஸ்தி கிரி தமிழில் அத்தகிரி' என்றாயிற்று. 5. புருடன் - புருஷன். இது சரீரத்தில் வசிப்பவன் என்று பொருள்படும்.