பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் அப்பிராட்டி வழியால் உறவு செய்தாருக்கு அநுகூலமான சொற்களைப் பேசுகின்றது அவரது திருப்பவளம்; இச் சொற்கள் சொல்லப்புக்கு இனியனான தன்னைக் கண்ட காட்சியாலே தடுமாறினால், குறையும் தலைக் காட்டிக் கொடுப்பது செவ்வரி படர்ந்த திருக்கண். அவனது நோக்கிற்குத் தோற்றாரை அணைப்பது திருக்கை. உத்தேசியமான நிலத்தில் (அதாவது திருவடியில்) விழ நின்றால் காற்கட்ட வல்லது திருவுந்தி. இது நடுவே அமுக்கும் சுழி அன்றோ? இவை எல்லாவற்றுக்கும் தோற்று விழும் இடம் எம்பெருமானது திருவடிகள். இவையாவும் காட்டிலெறிந்த நிலாப்போலாகாமல் பக்தர்களுக்கு அநுபவிக்கக் கொடுக்குமவன் என்பதைப் குறிப்பிடவே 'பிரான் (உபகாரகன்) என்கின்றாள். இங்ங்ணம் எம் பெருமான் திருமேனி அழகினை, என்அரங்கத்து இன்னமுதர் குழலழகர் வாயழகர் கண்அழகர் கொப்பூழில் எழுகமலப் பூஅழகர் (நாச்திரு. 11:2) (குழல் - திருமுடி) என்று ஆண்டாள் கூறி அநுபவித்ததையும் நினைத்துப் பார்க்கின்றோம். மேலும், இங்குப் பர, வியூகம், விபவம், இவற்றிற்குரிய திருநாமங்களையும் சொல்லாமல் அல்லாத உகந்தருளின திவ்விய தேசங்களில் நிற்கின்றவர்களின் பெயர்களையும் சொல்லாமல் குட்ட நாட்டுத் திருப்புலியூர் எம்பெருமானுடைய திருநாமங்களையே வாய்வெருவா நிற்கின்றாள் என்பது தோன்ற திருப்புலியூர் அருமாயன் பேரன்றிப் பேச்சிளள்' என்கின்றாள். அவள் நிலை தனக்கு அப்போதுதான் தெரியும் என்பது தோன்ற அன்னையீர்! இதற்கு என் செய்வேன்? என்கின்றாள். இந்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பதியைச் சதா புகழ்ந்து கொண்டிருக்கின்றாள் தலைவி என்பதையும்