பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 173 என்பது ஆன்றோர் கொள்கை. எனவே ஞானத்தையும் அநுட்டானத்தையும் சிறகுகளாகக் கொள்ளல் வேண்டும். ஆசாரியர்களும் ஒருசாலை மாணாக்கர்களும் புத்திரர்களும் இறைவனை அடையும் பேற்றுக்குத் துணையாக இருப்பார்கள் என்பது அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் கருத்தாகும். இவண் குறிப்பிட்ட அன்னம் வண்டு முதலியனவாகச் சொல்லப் பெறுபவர்கள் இன்னார் இன்னார் போன்றவர்கள் என்னும் உள்ளுறைப் பொருளும் அருளிச்செய்யப் பெற்றுள்ளது. அவற்றை ஈண்டுக் குறிப்பிடுவேன். அன்னம் : அன்னமாகப் பேசப்பெறுபவர்கள் : செல்வநம்பி பெரியாழ்வார், நாதமுனிவர் ஆளவந்தார் ஆகியோர்.' தும்பி, வண்டு : இவ்வாறு பேசப் பெறுபவர்கள் : நாரத முனிவர் லோகதாரங்க முனிவரால் தாங்கப்பெற்ற திருப்பாணாழ்வார் தம்பிரான்மார் (அரையர்) போன்றவர்கள்." கிளி, பூவை, குயில், மயில் : இவ்வாறு பேசப் பெறுபவர்கள் : 14. ஆசா. ஹிரு. 151 சூத்திர உரையில் விளக்கம் தரப்பெற்றுள்ளது. 15. மேலது. 152 உரையில் விளக்கம்.