பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள்



திருக்கோயிலைக் கட்டுவித்த பெருமையும் இவருக்கு உண்டு. நம் சுவாமியின் திருத்தந்தையார் திருநாட்டுக்கு எழுந்தருளிய சில மாதங்களுக்குள் காஞ்சி திரும்பினார் இப் பெருமகனார். நம் சுவாமி அவரைத் தம் ஆசானாக ஏற்று அவருடைய சுவீகார புத்திரனாகவே மாறி விட்டார். அவருடைய திருமாளிகையிலேயே நம் சுவாமி தங்கி அவரிடமே சாத்திரப் பயிற்சிகளும் பெற்றார்.

சுவாமியின் முதல் மேடைப் பேச்சு : ஒரு சமயம் சீடர்களின் வேண்டுகோட்கிணங்கி காதிசுவாமி ஐதராபாத்தில் சீதாராம் பாக் என்னும் இடத்தில் எழுந்தருள நேர்ந்தது. நம் சுவாமியும் அவருடன் ஏகினார். ஓராண்டுக்கு மேல் அங்கேயே தங்கி சாத்திரங்கள், சுவரூபகிரந்தங்கள் முதலியவற்றை அவரிடம் கற்று, கற்றுத் துறை போய வித்தகரானார். காதி சுவாமியின் நியமனத்தின் பேரில் நம் சுவாமி எம்பெருமானார் பெருமை என்ற தலைப்பில் முதலில் தமிழிலும், அடுத்து இந்தியிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி ஆசாரியனின் ஆசியையும் அனைவர் பாராட்டுதலையும் பெற்றார். காதிசுவாமிகள் கொல்கொத்தா எழுந்தருளவே, நம் சுவாமி காஞ்சி திரும்பினார்.

சுவாமியின் முதல் நூலின் அச்சு வடிவம் : ஒரு சமயம் திருநீர்மலை கண்ணாமாசாரியர் என்பவர் காஞ்சி தேவப்பெருமாள் சந்நிதி மண்டபம் ஒன்றில் திவ்வியப் பிரபந்தப் பெருமைகள் பற்றிச் சொற்பொழிவாற்றினார். அதனைச் செவிமடுத்த ஒரு தாதாசார்யர் சுவாமி என்ற குதர்க்கவாதி "தமிழ் ஒரு மிலேச்ச மொழி. அதில் தோன்றின பிரபந்தங்களை உயர்வாகப் பேசுதல் தகாது" என்று மறுத்தார். ஆனால் சொற்பொழிவாற்றின கண்ணமாசாரியர் பல சான்றுகளுடன் ஆழ்வார்கள் அருளிச்செயல்கள் 'திராவிட வேதங்கள்’ என்று மெய்ப்பித்து அனைவரையும் மகிழ்வித்தார். இதனைப் பொருளாகக் கொண்டு நம் சுவாமி