பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்க்கையும் மேற்கல்வியும் பிறவும் 17 வேண்டுகோளுக்கு ஒருப்படவில்லை. இறுதியான வாரம் ஒருமுறை சனிக்கிழமை மாலையிலும் ஞாயிறு முற்பகலிலும் சொற்பொழிவு நிகழ்த்த முடிவு செய்து 1931 சூலை முதல் வாரம் தொடங்கி சொற்பொழிவுகள் தொடங்கப் பெற்றன; இவை 1964வரை இடையீடின்றி நீடித்தன. பகவத் கதா பிரசங்க சபை' என்ற ஒரு சபை தொடங்கப்பெற்று இதன் ஆதரவில் சுவாமியின் சொற்பொழிவுகள் நடைபெற்றன. இச்சபையின்மூலம் சுவாமி பல பிரமுகர்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் ஏற்பட்டன. இங்கு இராமாயணம், பாகவதம், ஸ்தோத்திர ரத்னம், சதுர்ச்லோகி, அஷ்டச் சுலோகி, அமலனாதிபிரான், திருமந்திரார்த்தம், ஆசார்ய ஹிருதயம் பகவத்கீதை முதலியனபற்றிச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. பின்னர் 1936 ஆண்டு முதல் பகவத் விஷயம் பற்றிய பொழிவுகள் தொடங்கப்பெற்றன. திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு முதலியன தொடங்கப் பெற்றன. அடுத்து திருவாய்மொழி பற்றிய பொழிவுகள் நடைபெற்றன. 'உலகம் உண்ட பெருவாயா' (திருவாய் 6.10) சாற்றுமுறை திருமலையிலும் 'கங்குலும் பகலும் (மேலது.-7.2), திருஅரங்கத்திலும் (கோயில்) திருவாய்மொழி. 7-ஆம் பத்து சாற்று முறை திருவாறன்விளையிலும் (மலைநாடு) நடைபெற்றன. கங்குலும் பகலும் சாற்று முறை நிறைவு பெற்றதும். சுவாமி திருமாலிருஞ் சோலை மலைக்குச் (பாண்டி நாடு) சென்று (பண்டு இராமாநுசர் செய்தது போல) அழகருக்கு நூறு தடா வெண்ணையும் அக்கார அடிசிலும் கண்டருளப் பண்ணி மகிழ்ந்தனர் அடியார் குழுவினர். தவிர மார்கழித் திங்கள் முப்பது நாளும் திருப்பாவைப் பொழிவுகளும் நடைபெற்றன. இவையனைத்தும் தொண்டை மண்டலம் உயர்நிலைப் பள்ளியில் உள்ள பெரிய மண்டபத்தில் நடைபெற்றன.