பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் சத்காலட்சேப சபை : 1954-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் இச்சபை தொடங்கப் பெற்றது. அதுமுதல் சுவாமியின் பொழிவுகள் அனைத்தும் இதன் ஆதரவில் தான் நடைபெற்றன. முன்போலவே சனி ஞாயிறுகளில் நடைபெற்ற பொழிவுகள் தொண்டை மண்டலம் உயர் நிலைப் பள்ளியிலேயே நடைபெற்றன. மார்கழித் திங்களில் நடைபெறும் திருப்பாவைப் பொழிவுகள் மட்டிலும் வேறு மண்டபங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப் பெற்றது. 1964ஆம் ஆண்டு சுவாமிக்கு இருதயக் கோளாறு ஏற்பட்டதால் பற்பல பொழிவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிட்டது. எனவே 1964க்குப் பிறகு வாரந்தோறும் நடைபெற்று வந்த பொழிவுகள் இல்லாமல் போயின. ஆயினும் ஒவ்வோர் ஆண்டும் மார்கழித் திங்களில் நடைபெறும் திருப்பாவைப்பொழிவுகள் மட்டிலும் தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வந்தன. திருப்பாவைப் பொழிவுகள் : இவை தாம் சுவாமியின் ஈடும் எடுப்பும் அற்ற நிகழ்ச்சிகளாகும். இவற்றைச் சென்னையில் முதன் முதலில் தொடங்கி வைத்தது நம் சுவாமி அவர்களே. 1931-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த இப்பொழிவுகள் 1983-ஆம் ஆண்டு வரை தடைபெறாமல் நடை பெற்று வந்தன." மிகு புகழ் பெற்ற இப்பொழிவுகளைச் செவிமடுக்க ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் தொலைவிலிருந்தும் வந்து குவிந்து' 10. பல ஆண்டுகளாக நாடெங்கும் திருப்பாவை-திருவெம்பாவைப் பொழிவுகள் காஞ்சி சங்கர மடம் நியமனப்படி நடைபெற்று வந்தாலும் இம்முறைக்கு முதன் முதலில் வித்திட்டவர் நம் சுவாமியே என்பது மறுத்தற்கில்லை. 11. ஒரு சமயம் நான் திருப்பதியில் பணியாற்றிய காலத்தில் (1968 என்பதாக நினைவு) ஏதோ காரியமாக சென்னைக்கு வர நேரிட்ட போது இப்பொழிவு ஒன்றைக் கேட்டு அநுபவித்ததை நினைவு கூர்கின்றேன்.