பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்க்கையும் மேற்கல்வியும் பிறவும் 19 கொண்டிருந்தனர். நம் சுவாமி 51 ஆண்டுகளில் 53 முறை திருப்பாவைப் பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார் என்பதை வியந்து மகிழ்ந்து நினைவு கூரல் வேண்டும். அரையர் சேவை : திருவரங்கம் சீவில்லிபுத்துர், ஆழ்வார் திருநகரி, திருநாராயணபுரம் (கர்நாடகம்), போன்ற திவ்விய தேசங்களில் நடைபெற்று வரும் இச்சேவை மிகு புகழ் வாய்ந்தது. அரையர் என்போர் எம்பெருமான் திரு முன்பு திவ்வியப்பிரபந்தப் பாசுரங்களை கையில் தாளங் கொண்டு இசையுடன் சேவிப்பது வழக்கம். நம் சுவாமி இதில் மிக்க ஈடுபாடு கொண்டவர்கள். இதனால் தாம் நிகழ்த்தி வந்த திருப்பாவைப் பொழிவுகளில் ஒருநாள் பொழிவை அரையர் சேவையாக நடைபெறச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அரையர்கள் போலவே பட்டுக் கிரீடம் அணிந்து கையில் தாளத்துடன் கொண்டாட்டம், அபிநயம், பாசுரவியாக்கியானம் இவற்றைக் கணி என்ற குரலில் நம் சுவாமி சேவிக்கும் அழகே தனி. இறுதியாக (1982-83) மார்கழித் திங்களில் நிகழ்த்திய திருப்பாவைப் பொழிவுகளிலும் ஒரு நாள் அரையர் சேவையை மேற்கொண்டார் என்பது நினைவுகூரத் தக்கது. இதரப் பொழிவுகள் : திங்கள் ஒன்றுக்கு நான்கு பொழிவுகள்வீதம் நான்கு ஆண்டுகள் வேலூரில் இராமாயணப் பொழிவுகள் நிகழ்த்தினார். 1938-39-இல் ஆழ்வார் திருநகரியில் ஆசாரிய ஹிருதயம்பற்றி சுமார் 120 சொற் பொழிவுகள் சுவாமி அவர்களால் நடைபெற்றன . இது தவிர இந்திய நாடெங்கும் நடைபெற்றுள்ள சுவாமியின் பொழிவுகள் கணக்கில் அடங்கா. எழுத்துப் பணி : சுவாமியின் எழுத்துப் பணி ஈடும் எடுப்பும் அற்றது; இமயப்புகழ் வாய்ந்தது. இதனை ஈண்டு விரிக்கவில்லை. பின்வரும் இயல்களில் கண்டு தெளியலாம்.". 12. இந்நூல் - பக், 50