பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் முதலில் இருந்தபடியே வைத்திருக்கும் நேர்த்தி சொல்லும் தரமன்று. (7) சுவாமி ஒரு கல்விக் கடல். 'கற்றனைத்து ஊறும் அறிவு', 'கண்டது கற்கப் பண்டிதனாவான்' என்பவற்றின் உட்பொருளை நன்கு அறிந்தவர். ஆதலில் சதா படித்துக் கொண்டே இருப்பவர். இவர் படித்த நூல்கள் கணக்கில் அடங்கா. (8) எழுத்தாற்றல் நிறைந்த பெருமான் நம் சுவாமி. அவர்தம் வாழ்நாளில் பாதிப் பகுதியை எழுதுவதிலேயே கழித்துள்ளார். அவர் அறிந்த எல்லா மொழிகளிலுமே அவர் கையெழுத்து மிக அழகாக இருக்கும். உடல் தளர்ந்த நிலையிலும் கையெழுத்தின் அழகு குறைவதில்லை. அடியேன் சிறுவயதிலிருந்தே அழகாக எழுதுபவன். உயர் நிலைப் பள்ளியில் பயிலும்போது தமிழ் ஆங்கிலக் கையெழுத்து முதல் பரிசு பல்லாண்டுகளாக அடியேனை விட்டுப் போகாது. உடல் தளர்ந்த நிலையில் அது மாறிப் போயிற்று. சுவாமியிடம் அது மாறவில்லை. அஞ்சல் அட்டையில் வரும் அவர் கையெழுத்தை முகத்தில் ஒற்றிக் கொள்ளலாம். நம் அருமை இராஜாஜியிடமும் இந்த அழகைக் கண்டவன்; டாக்டர் மு.வ. விடமும் இதைக் கண்டு மகிழ்ந்தவன். (9) தளர்ச்சியிலும் கடுமையாக உழைத்தவர். இந்நிலையிலும் உடன் பதில் தருபவர். சதா கட்டுரைகள் வரைந்த வண்ணம் இருப்பவர். (10) எல்லாத் துறைகளிலும் கைங்கரிய ஊற்றம் மிக்கவர். காஞ்சி தேவப்பெருமாள் சந்நிதியில் திவ்வியப் பிரபந்தக் குழுவில் சுவாமிக்கு இருந்த ஈடுபாடு அளவிடற் கரியது. வெளியூர் செல்லும் நாட்களைத் தவிர குழுவாகச் சேவிக்கும் முறையைத் தவிர்த்ததே இல்லை. கோவிலில் சிறப்பான நிகழ்ச்சிகள் உள்ளபொது சுவாமி வெளியூர் செல்வதைத் தவிர்த்து விடுவார். திருப்பாவை பொழிவிற்காக