பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்தும் - மறையாத சோதி 39 சுவாமியின் அருமை பெருமைகளுக்கேற்ப சரம கைங்கரியத்தை நடத்தத் திட்டம் தீட்டப் பெற்றது. நீ வைணவர்கள் படைசூழ சுவாமிக்கு திருமஞ்சன தீர்த்தம் வேகவதி ஆற்றங்கரையிலிருந்து உபநிடதயாராயணத்துடன் எழுந்தருளப் பண்ணப்பெற்றது. சுவாமியின் திருமாளி கையின் வாயிலில் மிகப் பெரிய கொட்டகையை அமைத்தனர். திருத்தேர் (பிரம்மரதம்) உருவாக்கப் பெற்றது. பெரிய கொட்டகையின்கீழ் சிறப்பான ஒரு சிறிய கொட்டகையை பச்சைத் தென்னம் மட்டைகளைக் கொண்டு அமைத்தனர். அதனடியில் கலசங்கள் முறைப்படி அமைத்து அவற்றில் தீர்த்தங்களால் பூரிக்கச் செய்தனர். மாம்பள்ளம் பாஷ்யகாராசாரியர் சுவாமி புரோகிதராய் எழுந்தருளினார். சுவாமியின் சுவீகாரத் திருக்குமாரர் செல்வமணி என்கின்ற பி.ப. அரங்கநாதாச்சாரியர் சரம கைங்கரியங்களை "ஆளவந்தார் படி" என்னும் சிறப்பு முறைப்படி பிற்பகல் 12.30 மணிக்குத் தொடங்கினார். வைதிகப் பெருங்குழுவும் வைணவப் பெருந்திரளும் இவ்வரிய பெரிய சுவாமியின் சரம கைங்கரியங்களை இமை கொட்டாமல் சேவித்துக் கொண்டிருந்தன. சுவாமிக்கு சிறப்பான திருமஞ்சனம் ஆகி திருமேனி திருமண் காப்பு அணிவிக்கப்பெற்றது. தூய வெண்ணிறக் கரை பதித்த திருப்பரிவட்டமும் சமர்ப்பிக்கப் பெற்றது. சுமார் 700 நீவைணவர்கள் முன்னர் திருவிருத்தகுழாம் எழுந்தருள திருத்தேர்' தேவப் பெருமாள் மாட வீதிகளில் வலமாய் எழுந்தருளப் பண்ணப் பெற்றது. இத்தகைய புறப்பாடு நம் வாழ்க்கையில் காண்பதென்பது மிக அரிதான ஒன்றாகும். பூரீ சூர்ணபரிபாலனம் ஆன பின்னர் தேவப் பெருமாள் தான் உடுத்துக் களைந்த திருமஞ்சள் ஆடையினைத் திருப்பரி வட்டமாகவும், பூமாலைகளையும் தனது கைங்கரியபரர்கள் சூழ அனுப்பிவைக்க அவை சுவாமிக்கு வெகுமானமாயிற்று. பின்னர் தேவப் பெருமாள் சந்நிதி