பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்தும் - மறையாத சோதி 41 சுவாமியைப்பற்றி... (அ) அறிஞர்களின் கருத்துகள் (1) ரீமத் பரம ஹம்சேத்யாதி 28-வது பட்டம் வானமாமலை ராமாநுஜ ஜீயர்சுவாமி: "உடையவரையும் மாமுனிகளையும் அநுபவிக்கப் பெறாத பேரருளாளன் தன் ஏமாற்றத்தைப் போக்கிக் கொள்ள இரண்டுருவும் ஒன்றா யிசைந்து என்கின்றபடி எம்பெருமானாரையும் மாமுனி களையும் ஓர் உருவமாக அவதரிப்பித்து அநுபவிக்கத் திருவுள்ளங் கொண்டு நம் அண்ணங்கராசாரிய சுவாமியை அவதரிப்பித்து தம் திருவடிவாரத்திலேயே வித்யாப்பியாசங் களை நல்கி உபயவேதாந்தங்களையும் கற்பித்து அருளினான். அவருடைய உபய வேதபாராயண உபயவே தாந்த பிரவசனாதிகளாலே தாமும் தம் நாச்சிமாரும் பக்த ப்ரப்ருதிகளோடு அநுபவித்து எம்பெருமானார் - மணவாள மாமுனிகளை அநுபவிக்காத குறைதீர அநுபவித்து ஆனந்தித்தான். இதற்குப் போட்டியாக பெரிய பெருமாளைப் போலே ஆசை கொண்ட பரமபதநாதன் நித்தியசூரிகளாலே சதாசர்வ வித கைங்கரியங்களைக் கொண்டபோதிலும் நம் சுவாமியையும் விரும்பி அழைத்துக் கொண்டான், பரமபத நாதனும் மற்றும் அங்குள்ளாரும் ஆனந்திக்க, தேவப் பெருமாளும் மற்றுமுள்ள நாமும் சோகிக்கலாயிற்று. நம்மால் செய்கலாவது ஒன்றில்லை. ஒருவன் பெற்றால் மற்றொருவன் இழக்கை சகஜம். இதனால் சோகிப்பதைத் தவிர, வேறு வழி இல்லை." (2) பிள்ளைலோகம்ஸ்தலசயனத்துறைவார் இவர் ஆர் கொல்! நம் சுவாமியை நேரில் சேவித்தவர்கள் பலர். அவரது பெயரை மட்டிலும் அறிந்தவர்கள் சிலர்.