பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமிகளின் தமிழ்ப் புலமை 59 அரக்கரும் அங்கு அணுகும்போது அவர்களது வாடை பட்டவுடனே அது தானே நகை புரியுமாறு பொறி வைக்கப்பெற்ற தென்பர். இப்பாவை கண்டார் உள்ளமும் விழியும் கவரப்படுவதாய் பெருங் காமவேட்கை உறுவித்து இறுதியில் கொல்லும் என்று கூறுவது. இது தெய்வ நிர்மானம் என்பர். ஒரு காலத்தில் திருமகள் தம் முன் போர்க்கெழுந்த அவுணர் மோகித்து விழும்படி இக் கொல்லியம் பாவை உருக்கொண்டு ஆடினள் என்பதை, செருவெங் கோலம் அவுனர் நீங்கத் திருவின் செய்யோள் ஆடிய பாவையும்’ என்று சிலப்பதிகாரம் செப்பும், இக் கொல்லிப் பாவை கொல்லி மலையில் உள்ளது என்பதும், தெய்வத்தால் செய்யப்பட்டது என்பதும், காற்றினாலும் மழையினாலும் மற்றெல்லாவகை ஊறுகளாலும் தன் அழகிய நல் வடிவம் கெடாது என்பதும் நற்றிணையில் காணத்தகும். இப்பாவையின் அழகைத் தலைவியின் நலத்திற்கு உவமை கூறுதல் அகந்ானூறு, புறநானூறு முதலிய நூல்களிலும் சிறப்பாக உண்டு. சீவக சிந்தாமணி, குறுந்தொகை என்ற நூல்களிலும் இப்பாவைபற்றிய குறிப்புகளைக் காணலாம். ஆகவே தமிழ்க் கவிஞர்கள் கொல்லிப் பாவையை ஒப்புயர் வற்ற அழகிற் சிறந்த மாதர்க்கு உவமை கூறுதல் மரபு என்பது அறியப்படும்.இப்பாசுரத்தில் கொல்லியம்பாவை போன்றவள் என்று கூறாமல் கொல்லியம் பாவை' என்றே சொல்லிவைத்தது முற்றுவமை(உருவகம்). தாவி வையங் கொண்ட தடந்தாமரைக்கே என்றது போல." சுவாமிகள் தமது இளம் வயதில் சீமத் பரமஹம்ச அழகிய மணவாள ராமாநுஜ ஜீயர் என்று புகழ் வாய்ந்த 2. சிலம்பு - கடலாடு - அடி (60-61) 3. வைணவ உரை வளம் - பா.38.