பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமிகளின் தமிழ்ப் புலமை 73 இங்கு சுவாமி தம் தீபிகை உரையில் "மேலே சஞ்சரித்துக் குழந்தைகளை அனுங்கப் பண்ணும் சில பறவைகள் உண்டு; அப்படிப் பட்டவளாய் வந்தாள் என்று இவளது கொடுமையைக் குறிப்பிட்டவாறு" என்று வரைந்த உரை குறிப்பதாகும். பெரியவாச்சான் பிள்ளையும் இவ்வாறே உரைப்பார். என் அருமை மாணவர் (காரைக்குடியில் பி.டி. வகுப்பில் படித்தபோது) டாக்டர் இரா. அரங்கராஜன் (தமிழ்ப் பேராசிரியர், மதுரைக் கல்லூரி, மதுரை - 625 001) தம்மிடம் சுவாமி உரையாடியபோது நிகழ்ந்ததைக் குறிப்பிடுவார் : "இலக்கண மரியாதைகளைப் பற்றி விளக்கியருளினார். புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை என்ற தொடருக்கு லட்சித லட்சணை வழியில் அரிய விளக்கம் அளித்தார். புள்' என்பது அலகை (=கேடு) உடையது அன்றோ! ஆதலால் அலகை (=பேய்மகள்) நள்ளிருள் வந்த பூதனை என்று தேறுகின்றது. வடமொழி தமிழ்மொழி இலக்கண மரியாதைகள் எல்லாம் சுவாமிக்கு நன்கு வசப்பட்டிருந்தது கண்டு பெருவியப்பு அடைந்தேன்". தொடர்ந்து கூறுவது. இத்தகைய தமிழ்நெறியை அறியாதார் சிலர் "என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் (பெரியாழ். திரு . 4.9:3) என்ற விஷ்ணு சித்தன் திருவாக்கில் உள்ள போலும் என்பதை ஐயப்பொருளாக்கி அவப்பொருள் கண்டனர். ஆங்கவுரை யசை 'ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும் (தொல். சொல். 277, 278) என்ற நூற்பாக்களைக் கொண்டு போலும் என்பதை அசை நிலையாகக் கொள்வதே தமிழ் மரியாதைக்குச் சேரும் என்பது சுவாமியின் முடிபாகும். 6. காஞ்சி பி.ப. அண்ணங்கராசாரிய சுவாமி ஆற்றிய வைணவத் தொண்டு (செ.ப.க. வைணவத் துறை வெளியீடு.) - பக். 129.