பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

காஞ்சி வாழ்க்கை


 ததையும் கூட அவர்கள் எனக்குச் சொல்லி அனுப்பவில்லை. கருவளர் சிறப்பு நடைபெற்றபடியே, மக்களும் இன்று ஒருவர் நாளை ஒருவராகப் பிறந்தனர். பின்னவளுக்கு பெண்மகவு பிறந்த செய்தியைச் சொல்லி அனுப்ப எனது முதல் மகளைக் காண விரைந்து உக்கலுக்குச் சென்றேன். இளங்குழந்தையைக் கண்டேன். எனது பெரிய அன்னையார் அங்கேயே இருந்தனர். நான் அங்கே சென்ற அதே நாளில் முதல் குழந்தை பிறந்த மறுநாளில் முன்னவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதை அவர்கள் வீட்டார் சொல்லி அனுப்பவே இல்லை. உடனே ஊரில் இருந்த என் அன்னை யார் எனக்கு ஆள் அனுப்பினார். அவர்கள் எவ்வளவு வெறுத்தும் தான் சென்று பேரனைக் கண்டுவந்தனர். அனுப்பிய ஆள் வந்து செய்தியைச் சொன்னபோது நான் எண்ணெய்த் தேய்த்துக் கொண்டிருந்தேன். அந்த வேளையில் நல்ல செய்தி கேட்டால் பயன் விளைவதில்லை என்று எப்படியோ ஓர் எண்ணம் என் உளத்தில்முளைத்தது, எனவே நான் அஞ்சினேன். (அப்படியே இரண்டு ஆண்டுகளுக்குள் அவன் மறைந்தான்). இருவரும் முன்னரே தத்தம் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்ததை நான் அறிவேன். அவர்கள் விருப்பில் நான் குறுக்கிடவில்லை. மகள் மங்கையர்க்கரசி எனவும் மகன் மயில்வாகனன் எனவும் பெயர் பெற்றனர். மங்கையர்க்கரசியும் தாயும் சில திங்கள் கழித்து காஞ்சிபுரம் வந்து குடும்பத்தில் ஒன்றிவிட்டனர். ஆனால் மயில்வாகனனோ அவன் தாயாரோ திரும்பி வீட்டுக்கு வரவே இல்லை.

ஊரில் இருந்த என் அன்னையார் மட்டும் பேரனைக் காணவேண்டும் என்ற அவாவினால் யாரிடமாவது சொல்லி அனுப்பி எடுத்துவரச் சொல்லி, கண்டு மகிழ்வர். ஆனால் அதுவும் நெடுநாள் நிலைக்கவில்லை. சில திங்கள் கழித்து, பிள்ளையைக் கொடுத்தனுப்ப முடியாது என மறுத்து விட்டனர். எனது அன்னையாரும் அக்கொடுமையைத் தாங்க