பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போரும் வாழ்வும்

113


என்னை வாழ்த்திச் சென்றார். என் பதிலுக்குக்கூட அவர் எதிர்பார்க்கவில்லை. அவர், நான் மறுப்பேன் என்று எண்ணியிருக்கக்கூடும். அக்காலத்தில் உண்டான பல போர் பற்றிய அரசாங்கப் பதவிகளை நான் வேண்டாம் என ஒதுக்கியதை அவர் அறிவார். எனவே அவர் விரைந்து சென்றுவிட்டார். நான் அன்றுமட்டு மன்று– இன்றுவரை எனக்குப் பலர் பட்டம் பதவி அளிக்க வருவதை வேண்டாம் என ஒதுக்கியே வந்துள்ளேன். அப்படியும் இரண்டொரு நண்பர்கள்–தட்ட முடியாத நிலைமையில் எனக்கு அளித்த பட்டங்களை நான் சூட்டிக்கொள்வதுமில்லை. அதே பட்டங்களைச் சிலர் தம் பெயர்த்தாளில் (Letter head) பொறித்து வைத்துப் பாராட்டுவதைக் காட்டி, அன்பர்கள் என்னையும் அதுபோல் செய்யச் சொல்வர். எனினும் எனது படிப்பு, பணிபற்றி அமைந்த பட்டங்களைத் தவிர்த்து நான் வேறு எதையும் இட்டுக்கொள்வதில்லை. பிற்காலத்தில் அவைகளையும் விட்டுவிட்டுப் பெயரளவிலேயே நிற்கிறேன்.

இந்த நிலையில் அன்று நான் எப்படி ‘இராவ் சாகிப்’ பட்டத்தை ஏற்றுக்கொள்வேன்? நாட்டுக்கு பணியாற்றும் கடமைக்காக–உலக அமைதிக்குப் பாடுபடும் கடமைக்காக நான் அன்று பணிபுரிந்தேனேயன்றிப் பட்டம் பதவிக்காக அன்று, நான் விரும்பி இருந்தால் அன்று அரசாங்கத்தில் உயர்ந்த பதவி பெற்றிருப்பேன். இன்று தலைமைச் செயலகத்திலோ வேறு அரசாங்க இடத்திலோ உயர்ந்த பதவியில் இருந்திருப்பேன். ஆயினும் என் மனம் அவற்றிலெல்லாம் நாட்டம் கொள்ளவில்லை, அமைதியையே நாடிற்று. ஆகவே அப்பட்டத்தைவேண்டாம் என்று கூற விழைந்தேன். தாசில்தார் அவர்களிடம் கூறினால் அவர் என் சொல்லை என்னிடம் கொண்ட அன்பின் காரணமாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என அறிவேன். எனவே, மறுநாளே சென்னைக்கு வந்தேன். மாவட்டக் கலெக்டர் திரு. செட்டூர் அவர்களைக் கண்டேன். என்னைக் கண்டதும் வரவேற்று அவர்களும் அச்செய்தியைச் சொன்னார்கள். நான் அதுபற்றிப் பேசவே வந்திருக்-