பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோயாவாம் தீவினையே

129



மகவு பிறந்தது. அனைவரும் மகிழ்ந்தனர். என்னே அதற்கு முன் கேலி செய்த திரு. தேவராஜ முதலியார் போன்றவர்களெல்லாம் கூட வியந்தனர். ஆம்! அந்த மகனுக்கு நான் 'மெய்கண்டான்' எனவே பெயரிட்டேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை என்பதை உலகம் உணர்ந்து கொண்டது.

இந்த நிகழ்ச்சி முதலில் யாருக்கும் தெரியாதிருந்தும், பிறகு பலருக்கும் தெரிந்துவிட்டது. காரணம் மெய்கண்டார் கழகமும் அதன் அச்சாகிய திருஞானசம்பந்த முதலியாருமே யாவர். அவர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் அந்த மெய்கண் டார் பிறப்பின் சிறப்பை விளக்கி, அது வெறும் கட்டுக்கதை அல்ல என்றும் இன்றும் நம்பினால் அதே பயன் உண்டாகும் என்றும் விளக்கி, சான்றாக என் பெயரைச் சொல்லி நான் பெற்ற வாழ்வை விளக்குவார்கள். இன்றும் காஞ்சியில் அவர் பேச்சைக் கேட்டு வருகின்ற அன்பர்கள் அதை என்னிடம் சொல்லிச் சொல்லிச் செல்வர், எனினும் நான் அதைப் பெருமையாகவோ விளம்பரமாகவோ யாரிடமும் சொல்லவில்லை-சொல்வதுமில்லை. எப்படியோ நம்பிக்கை யின் அடிப்படை--உண்மையின் எதிரொலி-உலகுக்கு அறிமுகமாகி விடுகின்றது. ஆம் அந்த மகனே இன்று வளர்ந்து உடன் இருந்து உற்றுழி உதவுகிறான். 'தீவினை தோயா' என்ற நம்பிக்கையிலேயே என் வாழ்வும் நடை பெறுகிறது. அந்த நம்பிக்கையிலே என் மகன் வாழ்வும் அமைகின்றது.

ஒரு சில திங்கள் கழித்து நாங்கள் மறுபடியும் குடும்பத்தோடு திருவெண்காடு சென்று இறைவனுக்கு வழிபாடாற்றிப் போற்றி, நன்றி தெரிவித்துத் திரும்பினோம். பிறகு

நான் அந்தப் பக்கம் எங்கு சென்றாலும் திருவெண்காடு சென்றே வருவேன். எனது மகன் வயது வந்த பிறகு அப்பக்கம் சென்றால் திருவெண்காடு சென்றுவரச் சொல்லுவேன்.

9