பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்டு வழிதனிலே

அன்று சிலுவையில் அறையப்பட்ட மகானின் பெருமையை இன்றுதானே உலகம் ஓரளவிற்கு அறியத் தொடங்கியிருக்கிறது! ஆனால், அவருடைய உபதேசத்தை இன்றும் பின்பற்றுவதாகக் காணோம். இந்தக் கணக்கின்படி பார்த்தால் இன்று உயிர்த்தியாகம் செய்த காந்தியடிகளின் பொன் மொழிகளில் பொதிந்துள்ள உயர்ந்த கருத்துக்களை உலகம் சரிவர உணர்ந்து கடைப்பிடிப்பதற்கு எத்தனை நூற்றாண்டுகளாகுமோ?

இவ்வாறு எண்ணிப் பார்க்கும்போது உள்ளத்திலே சோர்வும் கலக்கமுத்தான் மிஞ்சுகின்றன. மானிட சாதியின் மேல் ஒரு அவநம்பிக்கை, ஒரு கசப்பு ஏற்படுகின்றது. “உலகம் இப்படித்தான் நெறியில்லா நெறியிலே போய்கொண்டிருக்கும்; அதைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பது தவறு; ஒவ்வொரு வனும் அவனவனுடைய கதிமோட்சத்தை நாடுவ திலேயே கண்ணுங் கருத்துமா யிருக்க வேண்டும்” என்று கூறுகிறவர்களோடு நாமும் சேர்ந்து கொள்ளலாமா என்று தோன்றுகிறது.

மானிட சாதிக்கு உய்வே இல்லைதானா? இல்லை என்று சொல்லுவதற்கு மனம் இடங்கொடுப்பதில்லை. மானிட சாதி முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது; வழியிலே அங்குமிங்குமாகச் சில சமயங்களில் தள்ளாடிக் கொண்டிருந்தாலும் அது இந்த உலகத்திலேயே சுவர்க்கத்தை அமைக்காமல் ஓய்வு கொள்ளாது என்று சாதிக்க வேண்டுமென்று ஆசை எழுகின்றது. இது நாய் வாலப்பா, இதை நேராக்குவது