பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

காட்டு வழிதனிலே

நிலையை அடைய முடிவதில்லை என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறேன்.

என்ன இருந்தாலும் மனிதன் தன் விருப்பு வெறுப்புக்களின் அடிமைதான். அவன் எந்நாட்டினனாகவும் இருக்கலாம்; ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று கூறும் பண்பாட்டைப் பெற்ற தமிழ் மன்னோர்களின் வழி வந்தவனாவும் இருக்கலாம். அவனும் விருப்பு வெறுப்புக்களின் அடிமைதான். அவனுடைய பேச்சிலே வேண்டுமானால் இப்பண்பாடெல்லாம் தனி மெருகு பெற்று வெளியாகும் ; ஆனால், செயலில் இறங்கும்போது அவனும் பல குறுகிய சுயநலங்களுக்கு ஆளாகவே இருக்கிறான். ஒவ்வொரு நாட்டிலும் யாராவது ஒரு சிலர் இந்தக் குறுகிய இருள் திரையை ஊடுருவிச் செல்லும் ஒளி படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் விட்டுச் சென்ற உன்னதக் கருத்துக்கள் இன்றும் சிரஞ்சீவியாக வாழ்கின்றன. இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் இக்குறுநெறியை விட்டு நீங்கினார்களில்லை. அதனால் சுயநலம் குறுக்கிடும்போது மக்களின் விருப்பு வெறுப்புணர்ச்சிகள் அவர்களின் அறிவொளியை மறைத்து விடுகின்றன. விலங்கு இனத்திலிருந்து பரிணாமக் கிரமத்தில் மனிதன் உருவாகியிருக்கிறான் என்பது இன்று பலரும் ஒப்புக் கொண்ட உண்மை. உணர்ச்சி வசப்படும் போது மனிதன் இன்றும் பழைய விலங்கு நிலைமையையே எய்தி விடுகிறான்.

மனிதனுடைய கீழ்த்தர உணர்ச்சிகளைக் கிளறி விடுவது இன்றும் வெகு எளிதாக இருக்கின்றது ;