பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்திய அடிப்படை

29

அவ்வளவு எளிதில் அவனுடைய மென்மை உணர்ச்சிகளை மேலெழச் செய்ய முடியாது. சாதி, மதம், நாடு, மொழி என்று ஏதாவதொன்றைக் கூறி அதன் மூலம் அவனை என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்யும் படி தூண்டலாம். சென்று மறைந்த ஓரிரண்டு ஆண்டுகளில் நம் தாய்நாட்டில் நடந்த நினைக்கமுடியாத குழந்தை வதைகளும், பெண் குலச் சீரழிவுகளும்: மற்ற அட்டூழியங்களும் இதற்குச் சான்று பகர்கின்றன. தனி மனிதன் தானகவே இவ்வளவு கேவலமான நிலைக்கு இறங்கியிருக்கமாட்டான். ஆனால் மேலே கூறப்பட்ட நான்கில் ஏதாவதொன்றின் பெயரால் அவனுடைய உணர்ச்சியைத் தூண்டி விட்டால் அவன் தன் இனத்தவர்களோடு சேர்ந்து கொண்டு என்ன வேண்டுமானலும் செய்யத் தயங்கு வதில்லை. அவ்வாறு செய்வது உயர்ந்த தருமம் என்று கூட அவன் எண்ணிக்கொள்ளுகிறான்.

மனித சாதியின் தலைவிதியை நிருணயிப்பதில் இன்று அரசியலுக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. ஆகவே, அரசியல் வாதிகளின் மனப்பான்மை உலகப் போக்கை உருவாக்குவதில் முக்கிய இடம் பெறுகிறது. அவர்கள் ஆழ்ந்த சிந்தனையோடும், விரிந்த மனப்பான்மையோடும் செயல் புரிவார்களானால் உலகத்திற்கு நன்மை உண்டாகும் ; இல்லாவிடில் உலகம் சீர்குலைய வேண்டியதுதான். ஆனால், இன்று பெரும்பான்மையான அரசியல்வாதிகள் மக்களின் கீழ்த்தர உணர்ச்சிகளைக் கிளப்பிவிட்டுத் தங்களுக்குச் செல்வாக்கு உண்டாக்கிக் கொள்ளுவதிலேயே கருத்தாயிருக்கின்றனர். பெர்னுட்ஷா