பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாரதியின் நகைச்சுவை



பாரதியாருடைய முறுக்கு மீசையையும், வெறித்த பார்வையையும், விரைப்பான உருவத்தோற்றத்தையும் நேரிலோ அல்லது உருவப் படத்திலோ பார்த்தவர்கள் அவரிடம் நகைச் சுவையை எதிர்பார்க்க மாட்டார்கள். இந்த ஆசாமிக்கும் நகைச் சுவைக்கும் வெகு தூரம் என்று சொல்லத்தான் அவர்களுக்குத் தோன்றும்.

அனற்பொறியைக் கக்கும் அவருடைய தேசீயப் பாடல்களைப் படிக்கின்றபோது இந்த எண்ணம் முற்றிலும் வலுப்பட்டு விடுகின்றது.

பயமெனும் பேய்தனை அடித்தோம் பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்

என்ற மாதிரி இடிப் பாடல்களையும்,

வலிமையற்ற தோளினாய் போ போ போ மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ

என்பது போன்ற கர்ஜிக்கும் வரிகளையும் எழுதிய கைக்கும் மென்மை வாய்ந்த நகைச்சுவைக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது என்று நினைப்பது இயற்கைதானே?

ஆனால், அவரது நாட்டுப் பாடல்களை விட்டு, கண்ணன் பாட்டு, குயிற் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களுக்கு வரும்போதே அவருடைய