பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அடிகளின் தோற்றம்


லகத்திலே பெரிய மகான்கள் தோன்றுகிறார்கள். சிறந்த உபதேசங்களைச் செய்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்டிற்கும் காலத்திற்கும் மட்டுமல்ல அவ்வுபதேசங்கள், என்றும் நிலைபெற்ற வாழ்க்கை நெறியாக நிற்க வேண்டிய உயரிய எண்ணங்களை அவர்கள் உலகிற்கே வழங்கிவிட்டுச் செல்கிறார்கள். ஆனால், அவர்களுடைய பெருமையையோ, அவர்கள் எடுத்துரைத்த கருத்துக்களின் அருமையையோ மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வதில்லை. யாரோ ஒரு சிலர் மட்டும் ஓரளவிற்கு அறிகிறார்கள். அறிந்து அவர்களைப் போற்றுகிறார்கள். அவர்கள் காட்டிய நெறியிலே நிற்க முயல்கிறார்கள். ஆண்டுகள் செல்லச் செல்லத்தான் மகான்களின் பெருமையை உலகம் உணர்ந்து கொள்ள முடிகிறது. விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. அதன் காரணமாக மக்களின் அறிவுத்திறன் மிக ஓங்கிவிட்டதென்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நான் மேலே கூறிய விஷயத்தைக் கவனிக்கிறபோது நம் அறிவு அவ்வளவு சிறப்பாகக் கூர்மையடைந்து விட்டதாகச் சொல்வதற்கில்லை.

காந்தி அடிகள் இவ்வுலகத்திற்கு வந்தார். அவர் இந்த நாட்டிலே பிறந்ததற்காக நாம் பெருமை கொள்கிறோம். அவர் நமக்குச் சுதந்திரம் வாங்கித்