பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதம் தேவையா?

71

அது கடவுளின் கட்டளைக்கு மாறுபட்டது" என்று மதத்தின் பெயரால் கூறப்படுகிறது. தாழ்த்த நிலையிலே இருக்கும் ஒருவனை உயர்த்தலாமென விரும்பினால், "அது அவன் விதி, அவனை உயர்த்துவதற்கு நீ யார்?" என்ற பேச்சு மதத்தின் பெயரால் எழுகிறது. இவற்றையெல்லாம் காணும்போது வளர்ச்சியிலே ஆர்வமுள்ளவர்களின் உள்ளம் பொங்குகின்றது. இந்த மதத்தையே அழித்து விட்டால் என்ன என்று அவர்களுக்குக் கோபம் பிறக்கின்றது.

ருஷியா நாட்டிலே மதத்தின் பெயரால் நடந்த அநீதிகளைக் கண்டு புரட்சித் தலைவர்கள் சீறினார்கள். பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த யாரும் எம் மதத்தையும் பின்பற்றக் கூடாது என்று தடை விதித்தார்கள். அவர்களை நாஸ்திகர்கள் என உலகமெலாம் தூற்றியதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தம் கொள்கைகளைப் பின்பற்றினார்கள். ஒரு புதிய சமூகத்தை உண்டாக்கினார்கள். அச் சமூகத்தைப் பழித்தும், அதில் மக்களுக்குச் சுகமே இல்லையென்றும் வேறு நாடுகளிலே தீவிரமாகப் பிரசாரம் நடந்தது: மதக் குருக்கள்மார் இதில் உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள். பொதுவுடைமைக் காரர்களை அரக்கர்களெனவும், அவர்கள் செய்யும் கொடுமைகளைத் தாங்காது மக்கள் அலறிக்கொண்டிருக்கிறார்களெனவும் புத்தகங்களும், பத்திரிகைகளும் எடுத்தோதி மக்களைப் பயமுறுத்தின. ஆனால், இரண்டாவது உலக மகாயுத்தம் உண்மையை வெளியாக்கிவிட்டது. ருஷிய மக்கள் அனைவரும் உலகமே