பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

காட்டு வழிதனிலே

அதிசயிக்கும்படி தங்கள் நாட்டிற்காகப் போரிட்டார்கள். தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்ட ககாலத்திலும் அவர்கள் தங்கள் உறுதியிலிருந்து மாறவில்லை. அந்நாட்டிலே அரக்கர்களுடைய அரசு நடந்திருந்தால் மக்கள் அதற்காக ஆயிரக்கணக்கில் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய முன் வந்திருக்கமாட்டார்கள். புதிய சமுதாயத்திலே மகிழ்ச்சியும் பலமும் பெற்றுப் புதிய உயிரொளியோடு விளங்கியிராவிட்டால் அந்நாடு இந்த யுத்தத்திலே வெற்றி கண்டிருக்க முடியாது. இதைக் கண்ட நம் மக்களும் எண்ணமிடலானார்கள். நாம் மட்டும் இந்த மதத்தை விடாமல் பிடித்துக்கொண்டு வளர்ச்சி குன்றியிருப்பானேன்? மதத்தைப் புறக்கணித்துவிட்டு வேறு ஒரு நாடு சிறந்த முறையில் முன்னேறி யிருக்கிறதென்றால் நாமும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது என்று வேகமாகக் கேட்கலானார்கள்.

இன்று காணப்படும் அழிம்புகளைக் கண்டு உள்ளம் கொதித்த இவர்கள் தங்களுக்கேற்பட்டுள்ள நியாயமான சீற்றத்தின் வேகத்திலே ஒரு உண்மையை மறந்துவிட்டார்கள். இவர்கள் எதை மதமெனக் கண்டிருக்கிறார்களோ அது உண்மையான மதம் அல்ல. "கிறிஸ்து மகான் உபதேசித்தது கிறிஸ்து மதம்; சர்ச்சு உபதேசிப்பது சர்ச்சு மதம்" என்று ஒரு அறிஞர் கூறியது போல் உண்மை மதம் வேறு. கோயில்களில் நடைமுறையில் இருக்கும் மதம் வேறு. மதம் என்பது வாழ்க்கை நெறி. வாழ்க்கையை நல்ல முறையிலே எவ்வாறு வாழலாம் என்பதைச் சொல்லுவதே மதம். ஒரு ஆங்கிலப் பெரியார் கூறு-