பக்கம்:காணிக்கை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

என்று நினைக்கிறேன்; உண்மைக்கும், உருவகத்துக்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறது. நேரிடையாக எதையும் சொல்லமுடியாவிட்டால் இந்த உருவகம்தான் பயன்படுகிறது, உருவகம்தான் எனக்குப் பிடிக்கும்.

இந்தக் கடற்கரையிலே நிறைய சிலைகள் வைத்திருக்கிறார்கள். ஒரு ‘கேள்வி பதில்’ வைக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதாவது உங்கள் நினைவு ஆற்றலைப் பரிசோதிக்கிறேன் என்று அர்த்தம். அதற்குத்தான் ‘கிவிஜ்' என்று பெயர். அறிவாற்றலை சோதிப்பது வேறு நினைவாற்றலை சோதிப்பது வேறு. உங்கள் அறிவாற்றலை நான் எப்படிச் சோதிக்கமுடியும்? அப்படிச் சோதித்தால் நிச்சயமாக என்னை எல்லாரும் சொல்வதுபோல அரைப் பயித்தியம் என்று கட்டாயம் சொல்வீர்கள். இது எல்லாம் சும்மா பொழுதுபோக்கு.

எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம். எத்தனை சிலைகள் வைத்திருக்கிறார்கள்! உங்களால் சொல்ல முடியாது. சொல்லிவிட்டால் உங்களை நான் முழுப் பயித்தியம் என்று மதிப்பிடுவேன். அதாவது கடற்கரையிலே நீங்கள் மனிதர்களைப்பார்ப்பது இல்லை. வெறும் சிலைகளைத்தான் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். நான் சொல்லட்டுமா கம்பர், இளங்கோ, பாரதி, பாரதிதாசன், அவ்வையார், போப் இவர்கள் எல்லாம் உண்மை மனிதர்கள். அவர்கள் பெரும் புலவர்கள். சாகா இலக்கியங்களைப் படைத்தவர்கள். நான் விட்டு விட்ட மூன்று சிலைகளை நீங்கள் சொல்லி விடுவீர்கள். 'கண்ணகி', 'காந்தி', 'தொழிலின் வெற்றி’ இந்த மூன்று சிலைகள்தான் எனக்குப் பிடித்தவை. ஏன் தெரியுமா? அவர்கள் மனிதர்கள் அல்ல; உருவகங்கள். அதாவது அவர்களைப் பற்றி நினைக்கும்பொழுது சில அடிப்படைச் செய்திகள் நினைவுக்கு வருகின்றன. நாம் சிலவற்றுக்கு மதிப்புத் தருகிறோம்.

அவளும் அடிக்கடி அந்தக் கண்ணகியைப் பற்றித் தான் காட்டுவாள். அதுதான் என் சிநேகிதி. அங்கே நாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/10&oldid=1320672" இலிருந்து மீள்விக்கப்பட்டது