பக்கம்:காணிக்கை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 விஷயங்களையும் பேசுவார்கள். வீட்டு விஷயங்கள் பேசு வதற்கு என்ன இருக்கிறது. நான் போகும் வழியில் இந்தக் காட்சிகளைக் காண்பது உண்டு. அவர்கள் மாணவர்கள். அதாவது எந்தக் கவலையும் இல்லாமல் பேசிக் கொண்டிருக்க உரிமை பெற்றவர்கள். நான் கூட நினைப்பது உண்டு. நான் ஏன் படித்து இருக்கக் கூடாது. யாரையாவது படிக்கும்பொழுது பழகிக் காதல் செய்து பிறகு கலியாணம் செய்து கொணடிருந்தால் ஒரு முழுமையைப் பெற்றிருக்கலாம். காதல் பண்ணிக் கலியானம் செய்து கொள்ளாததால்தான் எனக்கு இப் பொழுது மதுவின் மேல் மயக்கம் ஏற்படுகிறது. ‘காதல் என்பது வாழ்க்கையில் எப்படியாவது ஒருமுறை ஒருவர்க்கு ஏற்பட்டுத்தான் தீரும். அது மணத்துக்கு முன் ல்ை ஏற்பட்டால் நல்லது; பின்னல் ஏற்பட்டால் என்னைப் போல் வேதனைப்பட வேண்டியதுதான். எனக்கு இப்பொழுது ஒரு மனநிறைவு ஏற்பட்டது. இதுவரை நட்பு என்ற சொல்லால் அவள் உணர்வையும் அன்பையும் விளக்க முற்பட்டாள். அதை என்னுல் நம்ப முடியவில்லை. இதற்கு இது ஒரு புதுச்சொல் இருக்கத்தான் வேண்டும் என்று நினைத்து வந்தேன். அவள் அன்று ஒரு புதிய சொல்லைத் தந்தாள். அதாவது platonic love அதாவது கலை ரசிகக் காதல்’ எனபது அதன் பொருள். அழகை விரும்புவதால் ஏற்படும் உறவு என்பது அதன் விளக்கம். அவளிடத்தில் அழகுஇருக்கிறது. என்னிடத்தில் அன்பு இருக்கிறது. அவளுக்காக நான் ஒரு நாள் வாழ்ந் தேன். துணிந்து தீயவர்களை எதிர்த்தேன். தெரியாமல் அவள் என்னைப் பிடித்தாள். அப்பொழுது நான் மணமாக, வில்லை என்று நினைத்தாள். அந்த நினைவு மின்னல் போல் அவள் உள்ளம் என்னைத் தொட்டது. அதிலிருந்து அவளால் என்னிடமிருந்து விலகிக் கொள்ள முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/100&oldid=786809" இலிருந்து மீள்விக்கப்பட்டது