பக்கம்:காணிக்கை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I02 வர்களுக்கும் அடிதடி மோதல்கள் நடைபெறுகின்றன. ஏன் தெரியுமா? மாணவர்களுக்கு எதிர்காலத்தில் நம் பிக்கை இல்லை என்கிருள் இதைப்பற்றிப் பலர் பலவிதமாக விமரிசித்துக் கொண்டார்கள். "மாணவர்கள் மிகவும் பொறுப்பு இல்லாமல் நடந்து கொள் கிருர்கள்" என்று பேசினர்கள். "கண்டக்டர்கள்தாம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிருர்கள்' என்று பேசிக் கொண்டார்கள். மது சொல்கிருள்! "சாதி ஒழிய வேண்டும் என்று பல பேர் பேசுகிருர்கள். இப்பொழுது புதிய சாதிகள் உருவா கின்றன. இன உணர்வு பெருகிவிட்டது. ஒரு மாணவனைத் தாக்கினல் மாணவ இனமே திரள்கிறது. ஒரு கண்டக் டரைத் தொட்டுவிட்டால் அத்தனை பஸ்களும் ஓடாமல் நின்றுவிடுகின்றன. தனி மனிதன் செய்யும் தவறுகளால் சமுதாயமே பாதிக்கப்படுகிறது." என்று ஒரு புதிய தத்து வத்தைப் பேசிள்ை. அந்த மாதிரி நிகழ்ச்சிகளின் போதுதான் தனக்குச் சோதனை ஏற்பட்டது என்று கூறினள். எதுவுமே சொல்ல முடியாத காலமாகவிட்டது என்று தன் முடிவைச் சொன்ள்ை. இந்தச் சாமியார் மட்டும் எப்படி என் எதிர்காலத் தைப்பற்றிச் சொல்லமுடியும். என் நிகழ்காலப் பிரச்சனை பத்து. அவள் வீடு வந்து சேர வேண்டும். மறுபடியும் பழைய குடும்பம் அழகாக ஒடவேண்டும். நடுவில் வீசிய புயலின் பாதிப்பு மறையவேண்டும். இதை எப்படி அவர் கூறமுடியும். அவர் என் கையை நீட்டச்சொன் னர். அந்தக் கோடு கள் கைவிரல் மடிப்பால் ஏற்படுகின்றன என்று விஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/103&oldid=786812" இலிருந்து மீள்விக்கப்பட்டது