பக்கம்:காணிக்கை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i05 என்று நினைக்கிருள்; அதற்காக ஒரு பெரிய போராட்டம்: ஒத்துழையாமையைக்காட்டிவிட்டாள். நான் என்ன செய்ய வேண்டும் என்றே எனக்கே தெரியவில்லை. என் கவலையை உணர்ந்துதான் அந்தத் துறவி என் கையை நீட்டச்சொன்னர் என்று நினைக் கிறேன். அந்தக் கவிஞனின் நினைவு எனக்கும் வந்தது. 'அது என் மனைவியின் கவலை". என்ற எண்ணம் பளிச்சிட்டது. அவள் என்ைேடு வாழ விரும்புவது அவள் பிரச்சனை. எதற்காக நான் கவலைப்பட வேண்டும். அவள் இங்கே இருப்பதை விட அங்கே சுகமாக இருக்கிருள் என்பது தானே அர்த்தம். இல்லாவிட்டால் அவள் எப் பொழுதோ இங்கு வந்திருப்பாள் அவள் சுகத்தை நான் ஏன் கெடுக்க வேண்டும். திடீர் என்று அந்தச் சாமியார் என் நினைவுக்கு வந்தார். எப்படித் தனிமனிதர் வாழ்வுப் பிரச்சனைகள் இந்த மூட நம்பிக்கைகளை உண்டாக்குகின்றன என்பதற்கு அவர் ஒர் எடுத்துக் காட்டாக விளங்கினர். சில பேர் நூருண்டு வாழவேண்டும் என்று நினைக் கின் ருர்கள். எப்படி வாழ முடியும் என்றும் நூல்கள் எழுது கிறர்கள். நானும் படித்து இருக்கிறேன். அவர்கள் ஐம்பதை எட்டிப் பிடிப்பதற்கு முன்னலேயே சாவு அவர் களைப் பிடித்துக்கொள்கிறது. ஏன் மனிதன். நூருண்டு வாழ நினைக்கிருன்? அவனுக்குச் சமுதாயச் சிந்தனைகள் இருப்பது இல்லை, அப்படிப் பட்டவனே தான் நூருண்டு வாழ்வது எப்படி என்ற கவலையில் சிந்தனையில் ஆழ்கிறன். எனக்கு இந்த மாதிரி தத்துவங்கள் நிறையத் தோன்ற ஆரம்பித்து விட்டன. அவள் என்ைேடு இருந்தால் தத்துவம் பிறக்காது. அவள் மகத்துவத்தில் மறந்து கிடப்பேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/106&oldid=786815" இலிருந்து மீள்விக்கப்பட்டது