பக்கம்:காணிக்கை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 படிக்காதவன் நான்: அதல்ை தான் நான் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆல்சைப்படுகிறேன். "படித்தவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் போல் நடிக்கிறர் கள். அதிலும் பட்டம் வாங்கிவிட்டவர்கள் தம்மைப் பற்றிப் பிரமாதமாக நினைத்துக் கொள்கிருர்கள். என் பெட்ரோல் பங்கில் ஒரு அதிருப்தி எப்பொதும் இருந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் அதிருப்தி உடையவர்களாகவே இருக்கிருர்கள். நாங்கள் செய்வது கூட அநியாயம் தான். மாதம் முப்பதும் ஐம்பதும் தந்தே வேலையாட்களை வைக்கிருேம். அவர்கள் எப்படி சந்தோஷ மாக இருக்க முடியும். போனஸ் கேட்கிறர்கள். இதெல்லாம் விட்டு விட்டு எங்காவது ஒடிப்போய் விடலாம் போல அடிக்கடி தோன்றுவது உண்டு, நிம்மதி யற்ற வாழ்க்கை. அது சரி, யார்தான் நிம்மதியாக வாழ முடிகிறது. யார்தான் ஓடாமல் இருக்கிறர்கள்? நான் பல பேரைப் பார்க்கிறேன். எல்லாருமே வாழ்க்கையை விட்டு ஒடத்தான் பார்க்கிருர்கள், லட்சோப லட்சம் மக்கள் 'சாமி சரணம் ஐயப்பா' என்று கோஷமிட்டு ஓலமிடுகிறர்கள். ஒரே கூச்சல் வீட்டில் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை. எல்லாரும் படித்தவர்கள் தான். என் பக்கத்து வீடு மலை யாளிகள். அவர்கள் எப்படியோ இங்கு வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் தெய்வத்தைப் பரப்பிப் பிரச்சாரம் செய்து விட்டார்கள். 'சாமி சரணம் ஐயப்பா' என்று கத்துகிறர்கள். எல்லாரும் தான் பார்க்கிறேன் ஒரு ஞாயிற்றுக்கிழமை வந்தால் யார் வீட்டில் இருக்கிருர்கள். நான்தான் இருக் கிறேன் அது கூட பத்து இல்லாததால்தான் முரளியோடு விளையாட வேண்டி இருக்கிறது. "அப்பா! அம்மா எப்ப வருவாங்க" என்று கேட்கிருன். "இப்ப வரமாட்டாங்க"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/107&oldid=786816" இலிருந்து மீள்விக்கப்பட்டது