பக்கம்:காணிக்கை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i08 அல்ல; அது அவரவர் சொந்த விஷயம் அதைச் சொல்லித் தான் தீர வேண்டும் என்பது மனிதஉரிமையைப் பறிப்பது ஆகும். என் கனவுக் கன்னியைப்பற்றி அவள் தெரிந்து கொள்ள ஆசைப் பட்டாள். அதல்ை இவ்வளவு பெரிய முறிவு ஏற்பட்டது. அந்த மதுவுக்கும் ஒரு பிரச்சனையை எழுப்பிவிட்டேன். அவள் என்விட்டில் தங்கியது ஒரு பெரிய குறை. மாருத மாசு; அவள் அதை எப்படிச் சமாளிக்க முடியும். அவளைச் சந்தித்த போது இதைத் தான் சொன்னாள். "இன்றைய பெண் பழமைக்குப் பழமையாக விளங்க வேண்டும்; புதுமைக்குப் புதுமையாக விளங்க வேண்டும்" என்ருள். "நீங்கள் அவளுக்குக் கடிதம் எழுதுங்கள் முரளி அழுகிருன் என்று' என்று சொல்லிக் கொடுத்தாள். அதுவும் நியாயமாகப் பட்டது. வாழ்க்கையில் வேறு பட்ட நாங்கள் முரளியால் ஒன்றுபட முடியும் என்பதை நினைத்துப் பார்க்க முடிந்தது. - - அதன் விளைவு தான் முரளியை அவள் கொண்டு சென்று விட்டாள். 'உன்னிட மிருந்தால் அவன் கெட்டுக் குட்டிச் சுவர் ஆவான்' என்று கடுமையாக விமரிசனம் செய்தாள். வேலைக்காரி கமலம் யார் எப்படிப் பேசுகிருர்களோ அவர்கள் பக்கம் சாயும் இயல்பினள்; பிறர்மனம் நோகா. மல் பேசக் கூடியவள். அந்த மூன்று நாள் நிகழ்ச்சிகளை மூன்று மணி நேரத் தில் சொல்லி முடித்தாள். அந்த நாட்கள் வெளியேயும் ஒரே குழப்பம் தான் பஸ்கள் கண்ணுடி சுக்கு நூருகத் தன் சோகக் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தன. நல்ல காலம் என் தலை சுக்கு 'நூருகி இருக்கும். தப்பினேன். யார்கல்லடித்தது அடித்தவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/109&oldid=786818" இலிருந்து மீள்விக்கப்பட்டது